Skip to main content

Posts

Showing posts from May, 2009

எதுவுமே மாறவில்லை...

எங்கோ வீசிக் களைத்த காற்றின் எச்சம் மீண்டெழுந்து உடல் தழுவிச் செல்லும், காஸாவின் மேற்குக் கரையில் கேட்ட அதே கூக்குரல் வன்னியில் எதிரொலிக்கின்றது.. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தாய், சோமாலியாவில் அனாதையான குழந்தைகள்…. ருவாண்டாவில் கண்டெடுக்கப்பட்ட உடல் சிதைவுகள், ஆப்கானிஸ்தானில் புதைக்கப்படுகின்றன… ஈரானின் ஏவுகணை பரிசோதனை கண்டிக்கும் யுத்த வியாபாரி அமெரிக்கா, ஆயுள் வளர்க்க மருந்து தேடும் விஞ்ஞானம், அழிவுக்காய் ஆயத தயாரிப்பில்... கழிவகற்றும் தொழிலாளிக்கு விரல் படாத தூரத்தில் எட்டிநின்று கூலி... வல்லரசு போட்டி, பலிக்கடாக்களாய் பல நாடுகள்... உள்நாட்டு யுத்தங்கள் உலக நாடுகளில் தேர்தல் பிரசாரம்..... செவ்வாயில் வாழ ஆராய்ச்சி பூமியில் உயிர் தின்னும் பிண வெறியர்களின் பட்டியல் நீண்டு செல்லும் சாக்காடு…. கல்லறைகளாக வாழ்விடங்கள், தடுப்பு முகாம்கள், அகதிகள், பட்டினி, வறுமை, ஆதிக்கம், அழுகை, இத்தனைக்கும் மத்தியில் திரையரங்கில் நிரம்பி வழியும் மக்கள்….. ஜனநாயகம் சோஷலிசம் குடியரசு என இன்னும் பிற எல்லாமே புத்தகங்களில்.... எதுவுமே மாறவில்லை அடையாளங்களையும், முகவரிகளையும் தவிர…. -*-

IPL பேசப்படாத பக்கங்கள்...

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கத்தின் அறிவிப்பு- கொண்டாட்டங்கள், இந்திய தேர்தல்கள், உலக பொருளாதார நெருக்கடி, வடகொரியா மற்றும் ஈரானின் ஏவுகணை பரிசோதனைகள், பன்றிக் காய்ச்சல் என்று வளர்ந்து கொண்டே செல்லும் சர்வதேச நிகழ்வுகளுக்கு மத்தியில் உலகின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மணித்தியாலங்களை கட்டிப் போட்டிருந்தது IPL பருவம் 2. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து ஒலி ஊடகங்களிலும் IPL பருவம் 2 போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும், ஒளி ஊடகங்களில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டுச் சேவையான செனல் ஐ மாத்திரமே போட்டிகளை ஒளிபரப்பியிருந்தது. எனினும், முதல் இரண்டு நாட்களுக்கு பின்னரே செனல் ஐயில் போட்டிகள் ஒளிபரப்பாகின. 50 நாட்களை கடந்து நடைபெற்ற போட்டிகளில் ஆரம்ப நாட்களில் எவ்விதமான விளம்பர இடைவேளையும் இன்றி ஒளிபரப்பாகிய போட்டிகள் இறுதி நாட்களில் அதிகப்படியான விளம்பரங்களால், போட்டிகளின் போது ஓட்டங்கள், பந்துவீச்சுப் பெறுதிகள் என்பன போடப்படும் சந்தர்ப்பங்களில் விளம்பரங்கள் வந்து குறுக்கிட்டமை சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், எல்லா ஊடகங்களும

வார்த்தைகள் உன் வசமாய்!

உன்னைப் பேசி பேசியே மூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்… ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி ஏதோ ஒரு புள்ளியில் முடியும் அழகிய கோலமாய், எதையோ எழுதத் துடிக்கும் பேனா தாள் தொடும் போது மிக நெருக்கமாய் உன் முகம்…. மைத்துளி முடியும் போது முழுதுமாய் நீ நிறைந்திருக்கிறாய்… மழலையாய்… இமை விரிந்த போது அம்மாவே உலகம் என்றிருந்தது…. எதனையும் அறியாமல், நீ வந்து சுமந்து செல்கிறாய்… என் மணித் துளிகளை…. தொட்டு விடும் தூரத்தில் நீயிருந்த போதிலும்…… அனுமதியற்று …காத்திருப்பில்…. இரப்பவனாய் நான்….. இரங்காமல் நீ….. நினைவுக்கெட்டிய வரையில்…. நீயில்லாத எதனையும் என் வார்த்தைகள் பேசவில்லை….. மூர்ச்சையற்றுப் போன வார்த்தைகளுக்கு காற்றுக்கு வழி விட்டு….. பேனா கொடுத்த போது…. மீண்டும் எழுதத் தொடங்குகின்றது…. மயங்கி கிடந்த என்னை மலர வைத்தது உன்னை கடந்து சென்ற காற்றல்லவா! (கவிதை என்ற வடிவில் எதையாவது எழுதியே தீருவது என்று நினைத்து நான் என்றும் எழுதத் தொடங்கியது இல்லை. பல சந்தர்ப்பங்களில் பேருந்தில் செல்லும் போதும், தனியாக நடந்து செல்லும் போதும் நினைவுகளில் அவள் வந்து அமர்ந்து கொள்ள, என்னையும் அறியாமல் வார்த்தைகளை க

சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம்...

கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம் இது. தனது மரணத்திற்கு பின்னரே இந்த கடிதம் கியூப மக்கள் மத்தியில் வாசிக்கப்பட வேண்டும் என்பதே சேயின் விருப்பமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், சேயும், பிடெலும் பிரிந்துவிட்டார்கள் எனவும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் பல்வேறுபட்ட வதந்திகளை அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவான ஏகாதிபத்திய நாடுகள் உலவவிட்டதன் காரணமாக, சே கொங்கோவில் இருந்த சந்தர்ப்பத்தில், கியூப மக்கள் மத்தியில் பிடெல் இந்த கடிதத்தை வாசித்தார். பிடெல், இந்த நேரத்தில் எனக்கு பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது. புறப்படத் தயாரான போது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது.பிறகு எல்லாம் புரிந்தது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள். இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உண

எதிர்காலம்

யார் கொன்றதோ? யார் கொலை செய்யப்பட்டதோ? தினம் வேட்டை பழி வாங்கும் வெறி இனி யுத்தம் பாரிய தாக்குதல் எல்லாம் முடிவுக்கு வரும்....... இளமை தொலைந்த அங்கவீன சமூகம் குருதி வடிந்த கருகிய கந்தக வயல்வெளிகள் நான்! நீ! என்ற பாகுபாடு, ஆயுதங்கள் அணிவகுத்து நிற்கும் , உணர்வற்ற உடல்கள் மண்டைஒடுகள் ஒதுங்கி மரியாதை செய்யும், ஒற்றைக்கால் ஒற்றைக்கையுடன் புதியதாய் பிறந்த இரண்டு குழந்தைகள் வாழும் குற்றுயிராய்.... (இந்த கவிதை புதிதாக எழுதப்பட்ட ஒன்று அல்ல.மூன்று வருடங்களுக்கு முன்னர் "பயில்நிலம்" சஞ்சிகைக்காக எழுதிய கவிதை. ஏதோ ஒரு வகையில் நடைமுறையின் சந்தர்ப்பங்களுடன் இந்த கவிதை பொருந்தியிருக்கின்றது. அதனால் இங்கு இந்த கவிதையை மீள்பதிப்பு செய்கின்றேன்.கவிதை வாசித்து உங்களுக்கும் பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்கு போடலாம்)