Skip to main content

Posts

Showing posts from May, 2010

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்தி முறையின் வளர்ச்சிக் கட்டங்களில் தான் வர்க்க வேறுபாடுகள் தோன்றுகின்றன . வர்க்கப் போராட்டம் கண்டிப்பாக பாட்டாளி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் . அந்தச் சர்வாதிகாரமானது வர்க்கப் பிளவுகளை ஒழித்து வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்ற உண்மையை இந்த உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு மனிதன் பிறந்த நாள் இன்று . கார்ல் மாக்ஸ் - யூதனாக பிறந்து , கிறிஸ்தவனாக வளர்ந்து , மனிதனாக மரித்துப் போனவர் . அவரது வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது இ லகுவான விடயம் அல்ல . இதனை வாசிப்பவர்கள் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒரளவு அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிதான் இந்த பதிவு . கார்ல் மார்க்ஸ் , தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக உள்ள புருசியாவில் ட்ரையர் என்ற நகரில் 1818 மே 5 ம் திகதி பிறந்தார் . அவரது தந்தையின் பெயர் ஹென்றி மார்க்ஸ் , தாயின் பெயர் ஹென்ரிட்டா . தந்தை பிரபலமான சட்டத்தர ணியாக இருந்தமையால் , தந்தையின் வற்புறத்தலுக்காக சட் டம் பயின்ற கார்ல் மார்க்ஸ் , வரலாறு , மெய்யில் துறைகளிலும் க லாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார் .