Skip to main content

Posts

Showing posts from March, 2009

இனி வரும் காலம்

கால சுழற்சியின் பெரு நெருப்பில் தனிமையின் நிழலாய் வளர்ந்து செல்லும் நிசப்தத்தில் ஆளரவமற்ற வீதி எதையோ உணர்த்திச் செல்கிறது பார்வைக்கு எட்டிய தூரம் வரை உன் நினைவுகளைத் தவிர எதுவுமேயில்லை .... வெயிட்காலப்பொழுதுகளில் நிழலாய் தொடரும் உன்னை விலக்கி வைத்துவிட்டு இருளை விழுங்கி பயங்கர மௌனத்தையும் அச்சத்தையும் பிரசவிக்கும் கொடுரமான தனிமையில் பயணிக்கிறேன் .... எஞ்சியிருக்கும் வாழ்வில் ........

கசிந்துருகி கண்ணீர் மல்கி .....

உன் நினைவுகளை சுமந்தவாறு உறக்கத்தின் தொடக்கத்தில் வாழும் நான் விடியும் நொடியில்.. நீயில்லா மரண வாசலில் விழிக்கிறேன்... வழி நெடுகிலும் ... உன் நினைவுகளை தவிர எதையுமே அனுமதிப்பதில்லை என் உணர்வுகள்.. ஆழமாய் நிறைந்து போன உனக்கான என் நொடிகள் நீ இல்லாத நான் .. வேற்று கிரகத்தில் யாரும் அற்ற தனிமையில் ...

அமைதியை தேடி...

இரத்தம் தெறிக்கும் தேசம் மயிர்க்கால்கள் வீங்க தன்னையும் அறியாது சிறுநீர் கழிக்கும் சிறுவன்..... பேருந்து நெரிசலில் , தொலைந்து போன ஒரு மாத வியர்வை , விண்மீன்களை போட்டிக்கழைக்கும் தொடர் மாடி வீடுகள் , தொழில்நுட்ப நெரிசலில் வீதியோர சந்திப்பில் போலி புன்னகை , இத்தனைக்கும் மத்தியில் கடற்கரை நோக்கி பயணிக்கும் கால்கள், அமைதி தேடி........... (இந்த கவிதையும் "பயில்நிலம்" இதழில் வெளிவந்த ஒன்று தான். குழலி என்ற புனைப்பெயரில் எழுதியிருந்தேன். என்னால் எழுதப்பட்டு எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று)

காலப் பிரசவம்

விழுதிறக்கி வேர்கொண்டு வீறுடை வீரியமுடன் வெளித்தள்ளுகிறது காலம் சதைப்பின்டங்களை உப்பலாய் சிதைந்து உருக்குலைந்து அருவமாய் எச்சில் வடியும் நாக்கோடு மாமிச பிண்டம் தேடி காலம் கரைகிறது . இன்னொன்று... இன்னுமொன்று.... வேறொன்று.... வேறில் ஒன்று ..... இன்னும் தீர்ந்த பாடில்லை... பசி ... ("பயில்நிலம் " இதழில் இந்த கவிதையை குழலி என்ற பெயரில் எழுதியிருந்தேன், மீண்டும் வாசிப்பதற்கான ஆர்வத்தை இந்த கவிதை எனக்குள் உருவாக்கியதால் பதிவு செய்யும் எண்ணம் எனக்குள் எழுந்தது.)

மரணத்தின் ப்ரியம்

ஒரு மரணத்தைப் பற்றி கேள்விப்படுகையில் தயவு செய்து உங்கள் பணிகளை தொடர்ந்து செய்து அவமதிக்காதீர்கள் சொற்களற்ற பிரதேசமொன்றில் இருப்பது போலான பாவனையில் மௌனிக்காதீர்கள் மடிந்தவர்களின் ஆவியைப் பார்த்து நாய்கள் குரைப்பதாகவும் அமைதியற்ற உடலை சுமந்தலையும் இறந்தவர்களுக்கான பெரும்காற்று கிளம்பி சுழன்றடிப்பதாகவும் சொல்லும் நீங்கள் ஒரு கணமேனும் நின்று நிதானியுங்கள் பாதைகள் தோறும் பிணங்களுக்கான கதறும் ப்ரியங்கள் எல்லோரின் காலடியிலும் நசுங்கியபடியிருக்கின்றன. -க.அம்சப்ரியா- (நீண்ட நாட்களுக்கு முன்னர் அம்ருதா என்ற இந்தியா சஞ்சிகையொன்றில் நான் வாசித்த கவிதை இது. வாசிப்பதோடு, பலரை வாசிக்க வைக்க வேண்டிய ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வை இந்த கவிதை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால் உங்களுடன் இந்த கவிதையை பகிர்ந்து கொள்கின்றேன்.)

இப்படியும் மனிதர்கள்

முதல் பதிவுக்கு பின்னர் ஒரு நீண்ட இடைவெளி கிடைத்தது. அடுத்த பதிவுக்கான விடயங்கள் கடந்த ஒரு வாரத்தில் நிறையவே கிடைத்தன. இருந்த போதிலும், பதிவு எழுதவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.வாசிப்பவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை அல்லது விமர்சிப்பதற்கு தூண்டுதலை ஏற்படுத்துமானால் அதுவே போதுமானது. சரி விடயத்துக்கு வரலாம். கடந்த வாரம் தொழில் நிமித்தமாக நான் கிழக்கு மாகாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். சுமார் 5 நாட்கள் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டிய கட்டயாமும் எனக்கு ஏற்பட்டது. நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் கொழும்புக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை மக்களையும் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரம் ஒன்றில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த சைவ உணவகம் ஒன்றில் எங்கள் இரவு உணவை உட்கொள்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம்.( நான் ஒரு அசைவப் பிரியன் தான், இருந்தாலும் என்னோடு இருந்த சக ஊழியர் ஒருவர் சுத்த சைவ உண்ணி,அவருக்கு கம்பனி கொடுப்பதற்காக இரவில் மட்டும் நான் சைவம

நானும் வலைப்பின்னலில் ............

உலகமே வெகுவாக சுருங்கிவிட்டது. மின்னஞ்சல்- மின்னரட்டை என பல அவதாரங்கள் எடுத்த தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம், புளொக்கினூடாக புதியதோர் பரிணாமத்தை எட்டியிருக்கின்றது எனலாம். எதுவுமே ஒரு மையப்புள்ளியில் தொடங்குகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளும் எவரும், அது ஒரு மையப்புள்ளியில் முடிவை எட்டும் என்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.அண்மையில் நான் வாசித்த ஒரு சஞ்சிகை ஒன்றில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது நான்காவது உலகப் போர் பற்றிய ஒரு எதிர்வுகூறலாக அதனை வரைவுபடுத்திவிடலாம். ஒரு பிரசித்திப் பெற்ற விஞ்ஞானியான அல்பிரட் ஐன்ஸ்டீனின் கருத்துதான் அது. அதில் " மூன்றாம் உலகப் போரில் மனிதன் எவ்வகையான ஆயுதங்களை பயன்படுத்தப் போகின்றான் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயம் எனும் அவர், நான்காவது உலகப் போரில் மனிதன் பயன்படுத்தப் போகும் ஆயுதம் வெறும் கல்லும், தடியும் மட்டுமே என அவர் கூறுகின்றார்.அதாவது:"I know not with what weapons World War 3 will be fought, but World War 4 will be fought with sticks and stones" ஆக, இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு கட்டத்தில் தரித்த