Skip to main content

Posts

Showing posts with the label வரலாறு

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது அடிமையில்லை. அறிக! என்றார் இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான் கிருதயுகம் எழுகமாதே! -பாரதி (புதிய ரஷ்யா)- முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன. ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உ...

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்தி முறையின் வளர்ச்சிக் கட்டங்களில் தான் வர்க்க வேறுபாடுகள் தோன்றுகின்றன . வர்க்கப் போராட்டம் கண்டிப்பாக பாட்டாளி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் . அந்தச் சர்வாதிகாரமானது வர்க்கப் பிளவுகளை ஒழித்து வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்ற உண்மையை இந்த உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு மனிதன் பிறந்த நாள் இன்று . கார்ல் மாக்ஸ் - யூதனாக பிறந்து , கிறிஸ்தவனாக வளர்ந்து , மனிதனாக மரித்துப் போனவர் . அவரது வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது இ லகுவான விடயம் அல்ல . இதனை வாசிப்பவர்கள் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒரளவு அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிதான் இந்த பதிவு . கார்ல் மார்க்ஸ் , தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக உள்ள புருசியாவில் ட்ரையர் என்ற நகரில் 1818 மே 5 ம் திகதி பிறந்தார் . அவரது தந்தையின் பெயர் ஹென்றி மார்க்ஸ் , தாயின் பெயர் ஹென்ரிட்டா . தந்தை பிரபலமான சட்டத்தர ணியாக இருந்தமையால் , தந்தையின் வற்புறத்தலுக்காக சட் டம் பயின்ற கார்ல் மார்க்ஸ் , வரலாறு , மெய்யில் துறைகளிலும் க லாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார் . ...