Skip to main content

Posts

Showing posts from December, 2009

உன்னை மாத்திரம்

வார்த்தைகளை கோர்த்துக் கொடுத்துவிட்டு ஒரு மூலையில் போய் அமர்ந்து விடுகின்றது இந்த பாழாய்ப் போன புத்தி, சில அழகிய தவறுகளையும்……… இன்பமான வேதனைகளையும்…….. புரிந்து கொண்டே… என்னை தடுத்து நிறுத்தாமால் வழி நடத்திக் கொண்டிருக்கின்றது என் புத்தி…… அலுவலகப் பணியில் அப்படியே மூழ்கி கிடைக்கும் ஒரு விநாடி ஒய்வில் சோம்பல் முறிக்க, தொற்றிப் பிடித்து ஏறி உட்கார்ந்து கொள்கிறாய் நினைவலைகளில்…. எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது… இந்த நினைவுக் கொள்ளை….. எதையும் யோசிக்காது கடந்து போய்க் கொண்டிருக்கும் காலத்தினை நிறுத்தி கழுத்தில் பிடித்து, அப்படியே இடமிருந்து வலமாக சுற்றி ஒரு சில ஆண்டுகள் பின்னே போய் பார்க்க வேண்டும்…. மீண்டும் ஒருமுறை உன்மீதான காதலை நான் வெளிப்படுத்திய அந்தப் பொழுதை…. கைகள் வியர்க்க, இதயத்துடிப்பு அதிகரிக்க, சொற்கள் தடுமாற, அந்த ஒரு வார்த்தையை சொல்ல குறைந்தது முன்னூறு விநாடிகள். எப்படியும் சொல்லிவிடுவெதன்ற நினைவில் சொல்லிவிட்டு…. பூமி பார்த்து கொஞ்ச நேரம் நாணம்….. அட, அந்த கணமே உன் முகம் பார்த்து உன் பதிலை புரிந்து கொண்டிருந்தால்…….. இல்லை… இன்னும் வேகமாக இடமிருந்து வலம் சுற்றி…..

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

நினைவு உருமாற்றம்....

என் காதலில் உனக்கான இடத்தை வெறுமைப்படுத்த முடியாது ஆழ்ந்து கிடக்கிறது அறிவு.... என்னை மறந்து உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கும் நினைவு உருமாற்றத்தை செய்து விட்டு போய்விடுகிறது காதல்...... உன் மீதான காதலின் அறிகுறியாய் உறக்கம் இன்றி கலைந்த இரவுகளும், நட்சத்திரங்களை தேடிக் கதைத்த தனிமையும் என்னோடு நீங்காமல் இருக்கின்றன. உன்னால் நிராகரிக்கப்பட்ட காதலின் கனவுகள் ஆளில்லா வெளியில் விரவி உறக்கத்தை திருடிக் கொண்டிருக்கின்றன...... நீ வசிக்கும் தெருமுனை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் இதயம் திரும்பிப் பார்க்கின்றது. நீ நடந்து சென்ற வழியில் பூத்துக் கிடக்கும் என் காதலை...