Skip to main content

Posts

Showing posts from October, 2009

அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய இருசக்கர வாகனம் ( மோட்டார் சைக்கிள்) களவாடப்பட்டுவிட்டது. அல்லது என்னுடைய கவனயீனம் அந்த களவுக்கு துணைபுரிந்துவிட்டது. 6 மாதங்கள் திட்டமிட்டு வாங்கிய அதனை 2 வாரங்களே பயன்படுத்தினேன். இதனை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமிருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துவிட்டன . இருந்தாலும் நண்பர்கள் , உறவினர்கள் என்று என்னில் அக்கறைகொண்ட பலர் தொலைபேசியூடாக அல்லது நேரடியாக தொடர்புகொண்டு தமது துயரத்தை பகிர்ந்துகொண்டனர் . துயரம் தெரிவித்த பலர் சொன்ன விடயம் “ மச்சான் உனக்கு லக் இல்லடா ” என்பதாகும் . இந்த அதிர்ஷ்டம் (லக்) என்றால் என்ன? இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் முட்டாள்களுக்கான நியாயப்படுத்தல்களின் கருவிகள் என்பது என்னுடைய எண்ணம் . ஒரு மனிதனுடைய முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அவனது முயற்சியின் அளவை பொறுத்தது அந்த பலனின் அளவும். இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் ஒரு மனிதனின் எண்ணங்களையும், நடத்தையையும் பொருத்தே அமைகின்றன என்கிறார் ஹேர்ட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன்

405

மலை தொடும் முகிலையும், வெயில் விரித்த நிழல் போர்வையின் மனம் தொடும் அழகையும் பார்த்து, ரசித்து உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது, பனி நிறைத்த பச்சைநிற பசிபோக்கும் தாவரங்களின் தலையொடித்து உயிர் வாழ, 405க்காய் உழைப்பு சேர்க்கும், சிறகுகளற்ற மலைக்குருவி நான்... என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும் ஒரு நாளின் இரு பொழுதில், சில நேரம் ஒரு பொழுதில், சில நேரம் வெறும் வயிறாய், ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே, ஏதோ தேயிலை தரும் சாயத்தை உயிர் கடத்த உழுகின்றோம்… உலகெல்லாம் பல பேராய் பொழுதிறங்கி பேச்சளக்க கொஞ்சம், களைப்பிறக்க நாம் பறிந்த கொழுந்துகள் உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக, பல சுவையேற்றப்பட்டு, இன்னும் நாங்கள் சீனியற்ற வெறுஞ்சாயத்தை சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ? என் அப்பன், அவன் அப்பன், அவனுக்கும் அப்பன், இன்னும்…. என் பிள்ளை, அவன் பிள்ளை, அவனுக்கும் பிள்ளை இன்னும்….. முடிந்ததும், தொடர்வதும்…. அந்த சில சதுர அடி அறையில், அடைபட்டு நா அடக்கப்பட்டு….. உழைத்து நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே, எட்டாய் வளைந்து.... ஊதியம் உயர்த்திக் கேட்கும், பின் 405இல் ஏதோ ஒரு கை அடக்கும்… ஊர்க்காரன் தொழி

ஓக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்

1966 ஒக்ரோபர் 21 எழுச்சி இலங்கைத் தமிழர்களின் சாதிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு புரட்சிகர எழுச்சியாகும். சாதியத்தையும்- தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அவ் எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்ட வெகுஜனப் போராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களைப் பிணைத்திருந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிந்தது. ஜனநாயக மனித உரிமைகளை வென்றெடுத்து சமத்துவத்தையும் சமூக அந்தஸ்தையும் நிலை நாட்டியது.இவ் ஒக்ரோபர் 21எழுச்சி இடம் பெற்று நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இன்றைய இளம் தலைமுறையினர் அன்றைய போராட்டங்களின் முக்கியத்துவமோ அவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருந்த சாதிய-தீண்டாமைக் கொடுமைகள் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் கூட சாதியக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெவ்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கும் போது அவற்றின் அன்றைய தீவிரத்தையும் சமூகத் தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். கடந்த நூற்றாண்டின் முற்கூற்றிலிருந்து வடபுலத்திலே சாதியத்திற்கு எதிரான உணர்வுகள் வெளி வெளியான குரல்களாகி வளர ஆரம்பித்தன. ஐ

தேவதையிடம் 10 வரங்கள்: காதல் விண்ணப்பம்

பொதுவாகவே , இந்த தேவதை , கடவுள் , வரங்கள் போன்ற சமாச்சாரங்களில் துளியளவும் நம்பிக்கை இல்லாதவன் நான் . இருந்த போதிலும் , சகா லோகநாதன் அனுப்பிய தொடர்பதிவுக்கான சங்கிலியை எவ்விதத்திலும் துண்டாடி விடாது , அவரது அழைப்புக்கான கௌரவமாக இந்த பதிவை இடுகின்றேன் . இங்கு நான் வரம் கேட்பதற்காக அணுகும் தேவதை கொஞ்சம் மாறுபட்டவள் . சிறு வயதில் பாட்டி சொல்ல கேட்ட தேவதை கதைகள் , அதைத் தொடர்ந்து கனவில் வந்து பணக்காரனாக , நடிகனாக , விளையாட்டு வீரனாக , கவிஞனாக என என்னை மாற்றிய தேவதைகள் நிறையவே உண்டு . கையில் ஒரு மந்திரக்கோல் , இறக்கைகள் , வெள்ளைநிற உடை , சுற்றி பிரகாசம் என்று கற்பனையிலும் , திரை காட்சியிலும் கண்ட தேவதைகளின் உருவம் இது . இவையெல்லாவற்றையும் விட, இந்த வயதில் என்னில் (எம்மில்) வரும் தேவதையிடம் (அதுதான் புரியலையா, காதலி) கேட்கும் வரங்கள் என்று சொன்னால், 10 என்பது கொஞ்சம் அதிகம் தான். என்னைப் பொறுத்தவரையில் இந்த தேவதையும், இன்று வரையில் வெறும் கனவாகவே இருப்பதனால், இன்னும் சிக்கல் தீர்ந்தபாடாயில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில், இறுதியாக என்