Skip to main content

Posts

Showing posts from April, 2009

உலக புவி தினம்: கொழும்பை அதிர வைத்த காலநிலை

கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிப்பவர்கள்; நேற்றிரவு நிச்சயமாக, நிம்மதியாக உறங்கியிருக்கமாட்டார்கள். தொடர்ச்சியான இடியும், மின்னலும் எவரையும் உறங்கவிட்டிருக்காது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களாக இலங்கையில் மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதைப் போன்றே புவியியல் சார் பிரச்சினைகளும் அவதானிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உணரப்பட்ட புவிநடுக்கங்கள். பருவம் மாறிய காலநிலை. ஏனைய பருவங்களைப் போலல்லாது கோடைக்காலத்தில் அதிகமாக உணரப்பட்ட உஷ்ண நிலை. கடந்த வருடத்தில் புசல்லாவை பகுதியில் பெய்த அமிலமழை. என காலநிலை அச்சுறுத்தல் இலங்கையிலும் அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த சில தினங்களாக புதிதாக பதிவு எதுவும் எழுதாத நிலையிலும், இன்று புவி தினம் என்பதால் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நேற்று உறங்கச் சென்றேன். ஆக புவி தினமும் கொழும்பை அதிர வைத்த நேற்றைய காலநிலையும் ஏதோ வகையில் நமக்கான செய்தியை சொல்லிச் செல்வதாக உணர்ந்தேன். "தண்ணீருக்கு காத்திருப்பவனுக்கு தேநீர் கிடைத்தால் சும்மாவா

இன்று

இயந்திர எண்ணங்களால் நிறைந்த யதார்த்தம் , காற்றலைகள் வேவுகருவிகளாக தொடரும் மௌனம் , அண்டவெளியை முத்தமிடும் விஞ்ஞானம், நாகரிக ஆழத்தின் நச்சுப் பொறியில் உயிர்கள், கல்வி விருந்து பணப் பரிமாற்றம், சமாதானப் பந்தியில் ஆயுத அறிமுகம், கலவி இன்றி ஜனிக்கும் உயிர்கள், இயற்கை வயலில் வியாதிக் களைகள், ஊடக வலையில் உணர்ச்சி செலவு, அது, 'நேற்று' பிரசவித்த 'இன்று' குழந்தை... இந்த கவிதை நீண்ட நாட்களுக்கு முன் 'பயில் நிலம்' என்ற சஞ்சிகைக்காக என்னால் எழுதப்பட்ட கவிதை. நான் முதன் முதலாக எழுதிய கவிதை என்றும் சொல்லலாம். அதற்கு முன் சும்மா பல காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். நண்பர்களுக்கு காதல் கடிதங்கள் என்ற பேரில் பல கவிதை முயற்சிகளும் இருக்கின்றன. எனினும், அட நீயும் நல்ல கவிதை எழுதுறியே என்று பலரை சொல்ல வைத்த கவிதை இதுதான்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனின் வார்த்தையை காப்பாற்றிய பராக் ஒபாமா....

உலக பொருளாதார நெருக்கடி, சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், வடகொரியாவின் அணுத்திட்டங்கள், பாகிஸ்தானில் தீவிரவாதம் (நம்ம இலங்கை பிரச்சினையும் தான்) என சிதறிக் கிடந்த உலகத்தின் கவனம் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி வந்தது தெரியுமா? உலகின் பார்வை மட்டும் அல்ல இன்னுமொர் ஜீவனும் நேற்று வெள்ளைமாளிகையை சுற்றி வந்துள்ளது. அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள் என்று எல்லாவாற்றிலும் அந்த நான்கு கால் ஜீவனுக்குத்தான் முதலிடம். அது யார் என்று யோசிக்கின்றீர்களா? அது வேறு யாருமில்லை. 'போ" என்ற நாய்க்குட்டித்தான் அத்தனை ஊடகங்களையும் கட்டிப்போட்ட செய்தி. அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி முதற் பெண்மணி போல, 'போ" இப்போது அமெரிக்காவின் முதல் நாய் (என்ன கொடுமை சார்?) 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது மகள்களுக்கு அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றம் தான் இந்த 'போ". (நிறைய அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை விட தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் அதிகம். அந்த வகையில் ஒபாமா தனது உ

பராக் ஒபாமாவும், கியூபாவும்.

தனது பதவியேற்பின் போதே குவாண்டனாமோ சிறைக்கூடம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையும், ஒபாமாவின் பதவியேற்பு தொடர்பில் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவின் பாராட்டுக்களும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது. எனினும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதனால், ஆபிரிக்காவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திலும், கீழைத்தேய நாடுகளுடன் சிறந்த உறவையும் கடைப்பிடிப்பதிலும் பராக் ஒபாமாவின் பங்கு அதிகமாக இருக்கும் என பலர் எதிர்பர்த்திருந்தாலும், அவரது அமெரிக்க ஜனாதிபதி என்கின்ற முதலாளித்துவ, மேலாண்மை பதவி நிலை என்ற அடையாளம் அதற்கெல்லாம் சாதகமாக இருக்குமா என்பது சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்தது. இருக்கின்றது. அதனையெல்லாம் மாற்றும் விதமாக, அமெரிக்காவின் கால்பகுதியில் இருக்கும் இலத்தீன் அமெரிக்க நாடான கியூபாவுடன் 5 தசாப்தங்களாக நிலவி வந்த முரண்பாட்டை இல்லாது செய்யும் வகையில் கடந

SOMETIMES IN APRIL : படிப்பினை தரும் திரைப்படம்

ஒரு நீண்ட விடுமுறை, கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் நீண்ட ஒரு விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணத் தோன்றும். ஆனால் விடுமுறை கிடைத்தவுடன் சில சந்தர்ப்பங்களில் ஒய்வாக இருப்பதில் களைத்துப் போய்விடுகின்றோம். இருந்தாலும் இந்த விடுமுறை மழையின் காரணமாக விளையாட செல்வதற்கோ, நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கோ அதிக சந்தர்ப்பங்களை தரவில்லை. மழை காரணமாக மாலை நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், இணையத்தை பயன்படுத்துவதற்கும் உசிதமற்ற சூழ்நிலை இருந்த போதிலும், வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில், மழையையும் பொருட்படுத்தாது ஒரு திரைப்படம் ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னோடு பணிபுரியும் ஒரு நண்பர் அந்த திரைப்படத்துக்கான டிவிடி இறுவட்டை எனக்கு தந்தார். நிர்ப்பந்தம் காரணமாகவே அதை வாங்கி வந்த நான், ஒரு பொழுதுபோக்குக்காகவே அதனை பார்க்கவும் அமர்ந்தேன். ஆனால் அந்த திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்து 5 நிமிடங்களிலேயே அந்த திரைப்படத்தினை பார்க்க வேண்டியதன் உண்மையான அவசியத்தை அறிந்து கொண்டேன். உங்களில் ஒரு சிலரேனும் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்றாலும், அநேகமானோர

நானில்லாத நீ...

எத்தனை முறை என் நினைவேட்டின் கடைசி வரியில் உன்னை மறைத்து வைத்தாலும், உன் நிஜங்கள் செவி நனைக்க தென்றல் பட்ட மலராய் .. கலைந்து போகின்றேன். உன் சிணுங்கல்கள் என்னை சிதைத்ததுப் போலவே உன் மௌனமும், என்னை முகாரி இராகங்களுக்கு அடிமையாக்கியது. என் நிஜங்களையும் கனவுகளையும், உன் நினைவுகளுக்கே அளித்தேன்.. ஆனால், நீ எனக்காய் தந்தது உன் மறுப்பை மட்டும் தான், என்றாவது ஒரு நாள்... என் இதயத்தின் வெகு ஆழத்தில் நீ அமிழ்ந்து போவாய்.. அன்று, நான் இல்லாத உனக்காய், அனுதாபப்படும் இவ்வுலகம்..

எங்கிருந்து...

மடை திறந்த வெள்ளம் போல் மீறி வந்து மேனி சிலிர்க்குது ... எங்கிருந்து வந்ததோ ? என் மனப் பூங்காவில் சில்லிட்டு ரீங்காரமிடுகிறது உன் நினைவு..... பார்த்து கொண்டே வாழ துடிக்குது மனம்... நீ இமை திறந்து, இதழ் விரிக்க ... நொறுங்கி போகிறேன் நான்.. என் இதய துறையில்.... வேர் விட்டு, மலர்கிறது.... கண நொடியில் உன் முகம், அப்பப்பா ......