Skip to main content

Posts

Showing posts from February, 2010

பாராளுமன்றத் தேர்தல் திறந்துவிட்டுள்ள சந்தர்ப்பங்கள்....

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆளுங் கட்சியின் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பான தகவல்கள் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளன. புதிய வேட்பாளர்கள் பலர் களமிறங்கவுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டலாம் என்ற நிலையும் தோன்றியுள்ளது. இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் சற்று குழப்பமானதாகவே இருக்கின்றது. இந்த நிலையில் எஞ்சியிருக்கக் கூடிய சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடும் இதுவரை உறுதிசெய்யப்படாததாகவே இருக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய பாடத்தை கற்பித்து தந்துள்ளது. நீண்ட காலமாக இலங்கை சந்தித்த பல தேர்தல்களில் முடிவினை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கிய சிறுபான்மை வாக்குகளின் செல்வாக்கு செயலற்றுப் போன சந்தர்ப்பத்தை காணக் கூடியதாகவிருந்தது. சிறுபான்மையினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்காமையில் இருந்து அவர்களுக்கு தேர்தலில் அல்லது தே

தொடரும் முடிந்த முடிவு....

அட….இதுக்குத்தான்…இத்தனை ஆர்ப்பாட்டமா? என்று யோசிக்கும் போது, தேர்தல் வந்தது. என்ன நடந்தது? யாருக்கு இலாபம்? கேள்வி கள் மட்டும்தான் மிச்சம் . மீண்டும் செங்கோலுக்கான ஒரு போட்டி பிறர் கறை காட்டி தம்மை புனிதப் படுத்திக் கொண்ட கோமாளிகள்…. சிறந்த கோமாளியை தெரிவு செய்த மக்கள் கூட்டம் பிரசார பீரங்கிகளாய் சில ஊ(ஊ)டகங்கள் வால் பிடித்து, கொடி பிடித்து, கோன் உயரச் செய்யும் கோலாகலங்கள்…. வளமான எதிர்காலமும், நம்பிக்கையான மாற்றமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைக்காய் ஒரு புள்ளடியிட்டு…. எங்கிருந்தோ எவனோ ஆட்டி வைக்க குடுமி கொடுத்து காத்திருக்கும் அடிமைகளாய் வாக்காளர்கள்… உடன்படிக்கைகளும், வாக்குறுதிகளும், தாவல்களும், இன்னும்பலவும்…. தொடரும் மாயாஜாலங்களாய்…. துப்பாக்கிகளின் (துர்ப்பாக்கிகளின்) வேட்டுக்கள் (வோட்டுக்கள்) உள்ளவரை…… ஜனநாயகப் போர்வையில்….