என் காதலில்
உனக்கான இடத்தை
வெறுமைப்படுத்த முடியாது
ஆழ்ந்து கிடக்கிறது
அறிவு....
என்னை மறந்து
உன்னை மாத்திரம்
நினைத்துக் கொண்டிருக்கும்
நினைவு உருமாற்றத்தை
செய்து விட்டு போய்விடுகிறது
காதல்......
உன் மீதான
காதலின் அறிகுறியாய்
உறக்கம் இன்றி
கலைந்த இரவுகளும்,
நட்சத்திரங்களை தேடிக்
கதைத்த தனிமையும்
என்னோடு நீங்காமல்
இருக்கின்றன.
உன்னால் நிராகரிக்கப்பட்ட
காதலின் கனவுகள்
ஆளில்லா வெளியில் விரவி
உறக்கத்தை
திருடிக் கொண்டிருக்கின்றன......
நீ வசிக்கும்
தெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்
பூத்துக் கிடக்கும் என் காதலை...
நீ வசிக்கும்
ReplyDeleteதெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்
பூத்துக் கிடக்கும் என் காதலை...
ம்ம்... கவிதை
ReplyDeleteநிறைய விஷயங்கள் பேசுகிறது...
உன்னால் நிராகரிக்கப்பட்ட
ReplyDeleteகாதலின் கனவுகள்
ஆளில்லா வெளியில் விரவி
உறக்கத்தை
திருடிக் கொண்டிருக்கின்றன......
நீ வசிக்கும்
தெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்
பூத்துக் கிடக்கும் என் காதலை...
அற்புதமான வரிகள்......
உங்கள் வெற்றிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....
பூத்துக் கிடக்கும் என் காதலையா???????
or
பூத்து உதிர்ந்து போய் கிடக்கும் என் காதலையா???????
அருமை...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் நன்றிகள்...
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteமேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
என்னை மறந்து
ReplyDeleteஉன்னை மாத்திரம்
நினைத்துக் கொண்டிருக்கும்
நினைவு உருமாற்றத்தை
செய்து விட்டு போய்விடுகிறது
காதல்......
இந்த காதலே இப்படி தான் நண்பரே.. சரியாக சொன்னீர்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திவ்யா.....
ReplyDelete