Skip to main content

Posts

மே தினத்தை வென்றெடுத்த கதை

அறிமுகம் இன்றைய காலப்பரப்பில் பல சமயங்களில் எதற்காக கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாமல் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. எத்தனையோ தினங்கள் கொண்டாடப்பட்டாலும் உழைக்கும் மக்களின் தினமாக அமைவது என்னமோ மே தினம் மட்டும்தான். இந்த மே தினத்தின் தோற்றத்தையும் அதனோடு இணைந்த குருதி தோய்ந்த பக்கங்களையும் மீள்நினைவூட்டல் செய்வதற்காய் பின்னோக்கிய பார்வை. ஆரம்பகாலம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், உதிக்கும் சூரியன் மறையும் வரை, இதற்கு மேலாகவும் வேலை செய்வதே தொழிலாளரின் கடமையாக இருந்தது. இது பல ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்ததால், இதன் கொடுமை குறித்த தெளிவை எவரும் கண்டுகொள்ளவில்லை. 1806இல் அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவர்கள், வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தை ஒழுங்கு செய்ய முயற்சித்தமைக்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். இவ்வழக்கே தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்கள் வேலை செய்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியது. இதன் விளைவாகவே, “தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், அவர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும்” என்றும் குரல்கள் ஒலிக்...

நினைவுகள் இயக்கும் காதல்

தனிமை துரத்தும் நொடிகளில் எழுதத் தொடங்கி எழுதி முடிக்காத ஒரு கடிதம் உன் பிடிவாத மறுப்பால் வாசிக்கப்படாமல் இதய அறையின் இருட்டறையில்… நினைவுகளாய் நெருங்கி வெறுப்புக்களாய் விலகிச் செல்லும் புள்ளி விஸ்வரூபமெடுக்கின்றது ஆழ்மனதில் அலையடிக்கும் கணப்பொழுதில்…. இரண்டாம் தாயாய் என் வாழ்வில் உனை இணைக்கும் காதல் போரில் ஆயுதங்களின் கடிவாளங்களாய் இறுகிக் கிடக்கும் உன் மனதை தாக்க முடியாமல் அந்தரத்தில் தடுமாறுகின்றது என் நினைவு….. சூறாவளியாய் சுழன்றடித்து பிரக்ஞையற்றதாக்கிய உன் கண் இமைக்கும் நொடிக்குள் பார்வை சொன்ன செய்தி பிரதியெடுத்து பதிவானது என் எண்ணக் கோப்பில்….. உன் இமை மடிந்த கணங்களும், இதழ் விரிந்த நொடிகளும் இறக்க விடாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றது உன் மீதான என் காதலை…… பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. தினந்தோறும் நாட்குறிப்பேட்டில் எழுதும் பழக்கம். ஆகஸ்ட் மாத பொழுதொன்றில் எழுதியிருக்கின்றேன். வாசித்துப் பார்த்தேன். பிடித்தது. பகிர்ந்து கொள்கின்றேன்.

ஜனநாயகம் வளரட்டும்

பார் ஆளும் மன்ற உறுப்பினராய் தான் பிறக்க பாக்கியங்கள் பல செய்த பின் கண்டிருந்த சலுகைகள் எல்லாம் மறந்திடத்தான் ஆகிடுமோ! எதிர்க்கட்சி, ஏனை எக்கட்சி என்றாலும் ஊர் கூடி வாக்கிட்டு வாழ்த்துச் சொல்லி மாலையிட்டு ஏற்றிவிட்ட புகழ் வாழ்க்கைதான் குறைந்திடுமோ! பார் ஆளும் மன்றம் தான் என்ன? பகைவன் வீடா? இல்லை பாம்பு வாழும் காடா? பல மக்கள் வாக்குப் போட்டு வழியனுப்பி வைத்த தீரர்கள் கூடும் திடல் அல்லவா! எத்தனை தான் பேசினாலும், ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமெடுத்து கார் செல்ல குளிர்காய்ந்திருந்த வேட்பாளர் எந்நாளும் அப்படியே திளைத்திருப்பாரோ! ஒருநாள் தேர்தல் வரும், தீரர்கள் களம் புகுவர், கையெடுத்து கும்பிடுவார், கால் தொட்டு வணங்குவர், ‘ஐயா’, ‘அம்மணி’ மக்கள் தெய்வங்களாகுவர்! அந்த ஒரு பொழுது போதாதா! பின் பல காலம் அடுத்த தேர்தல் வரும் வரை அவர்கள் தெய்வங்களாய், நீவீர் இல்லாத ஒன்றாய், காணாமல் போவீர்! ஒன்றாகி, பலவாகி, பல்லுருவமாகி, அமைச்சாகி, அரசாகி, அகிலம் போற்றும் அநாதியாகி, பின் மீண்டும் தேர்தல் நாளில் மக்களாகி! நம் தலைவன், நம் தலைவி- யார் மேல் பழியுரைப்போம்? சொன்னவன் யார், நாவை தறி! காட்டியவன் யார் கையை வெட...

அங்காடித் தெரு – முதலாளிகள் ராஜாக்களாய்….தொழிலாளிகள் அடிமைகளாய்….

இந்தியாவின் , சென்னை நகரில் எப்போதும் சனநெரிசலாக காணப்படும் ரங்கநாதன் தெருவை அங்காடித் தெருவாக மாற்றி இயக்கியிருக்கின்றார் வெயில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் . இந்தியாவுக்கு ஒரே ஒரு முறை விஜயம் செய்திருந்த போதிலும் , அந்த ரங்கநாதன் தெருவுக்கும் மறக்காமல் போயிருந்தேன் . ஒரு 30 நிமிடங்கள் அந்த தெருவில் நடந்து கொண்டிருந்தால் , ஆயிரக்கணக்கான முகங்களைப் பார்ப்போம் . ஆனால் அடுத்தநாள் அதே தெருவில் பயணித்தாலும் இவர்கள் எவரையும் நினைவில் வைத்திருக்க முடியாது . அவ்வளவு விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதி அது . வசந்தபாலனின் முந்தைய படமான வெயிலும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை போராட்டத்தை கருவாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது . இந்த திரைப்படமும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலையை சித்திரிக்கும் படமாக இருக்கின்றது . எனினும் , யதார்த்தமான ஒரு விடயம் கதைப்பொருளாக கொள்ளப்பட்டிருக்கின்றது . இது இந்தியாவுக்கு மாத்திரமான கதைக்கருவல்ல என்பதே முக்கியமாகின்றது . இலங்கையிலும் , இவ்வாறு தொழிலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில...