Skip to main content

Posts

எங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....

செவ்விந்தியத் தலைவர் சீயட்ல் (Si’ahl ), தம்முடைய பாராம்பரிய நிலம் தொடர்பில் எழுதிய கடிதம் . செவ்விந்தியர்களின் பாரம்பரிய உறைவிடத்தை அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியின் போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது . இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைத்த அந்த அரிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் சிறுமுயற்சி இது . திட்டமிட்ட குடியேற்றம் , பலவந்தமான குடியேற்றம் என அன்றாட செய்திகளில் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கடிதம் நமக்கும் ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கின்றது . " உங்களால் வானத்தையும் , நிலத்தின் அனலையும் வாங்கவோ அல்லது விற்கவோ எவ்வாறு முடியும் ? உங்கள் சிந்தனை எமக்கு விசித்திரமாக இருக்கின்றது . நாங்கள் சுத்தமான காற்றையும் , பிரகாசமான நீரையும் கொண்டிராவிட்டால் உங்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும் ? இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்காக பூஜிக்கப்பட்டது . பிரகாசிக்கும் ஒவ்வொரு பைன் மரங்களும் , கரையின் மணல் துகள்கள் ஒவ்வொன்றும் , கரும்ப...

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன. ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘ அவள் நினைவு , போராட்டத்திலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது ’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்...

இலங்கை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2010-மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

மக்களிடையே அருகியுள்ள புத்தக வாசிக்கும் திறனை வளர்க்கவும், ஈழத்து நூல்களினை இளஞ் சமுதாயத்தினர் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தேசிய கலை இலக்கியப் பேரவையின், கொழும்பு பேரவை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா-2010ஐ ஏற்பாடு செய்துள்ளது. நாளை தொடக்கம் மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஈழத்து நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறவுள்ளதோடு, தினந்தோறும் தெரிந்தெடுக்கப்பட்ட ஈழத்து இலக்கியங்கள் நான்கு மாலை நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடகம், கவியரங்கம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள். அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்! மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும் இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை , 571/15 காலி வீதி , வெள்ளவத்தை . ( றொக்சி திரையரங்கிற்கு முன் ) காலம் 18,19,20–06–2...

சே. நீ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்....

விடுதலையை விரும்பும், சுதந்திரத்தை விரும்பும், தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் ஆதர்சனமாக இருக்கும், ஒரே மந்திரச் சொல் ‘சே’. 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் ஆர்ஜண்டீனாவின் ரொஸாரியோவில் எர்னெஸ்டோ குவேரா மற்றும் ஸெலியா டி லா செர்னா ஆகியோர் இந்த புரட்சிக் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். உலகெங்கும் உள்ள புரட்சி ஆர்வலர்களால் ‘சே(நண்பா அல்லது சகா)’என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரிய ஒரே மனிதன். பதவி கிடைத்தவுடன் தம்மை கடவுள்களாக அறிவித்துக் கொள்ளும் உலகில். தமக்கு கிடைத்த உயரிய பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுடன் இணைந்து, மக்கள் போராட்டத்துக்காக உயிர் துறந்த மனிதன். வாழ்நாளின் இறுதி வரை (1967, ஒக்டோபர் 9ஆம் திகதி) மக்களைப் பற்றிய சிந்தித்து மக்களில் ஒருவனாகவே மரித்த மாபெரும் செயல்வீரர் சே. புரட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, எந்தவொரு செயலிலும் தீவிர மனவுறுதியுடன் செயற்படுபவர்களுக்கும் சே என்ற சொல் மறக்க முடியாதது. சே என்ற மந்திரச் சொல்லை உச்சரித்து வரும் கோடிக்கானவர்களில் நானும் ஒருவன். சேயின் 82ஆவது பிறந்தநாள் அன்று பலரும் அவரைப...