Skip to main content

Posts

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….
Recent posts

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது அடிமையில்லை. அறிக! என்றார் இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான் கிருதயுகம் எழுகமாதே! -பாரதி (புதிய ரஷ்யா)- முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன. ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உ

எங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....

செவ்விந்தியத் தலைவர் சீயட்ல் (Si’ahl ), தம்முடைய பாராம்பரிய நிலம் தொடர்பில் எழுதிய கடிதம் . செவ்விந்தியர்களின் பாரம்பரிய உறைவிடத்தை அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியின் போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது . இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைத்த அந்த அரிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் சிறுமுயற்சி இது . திட்டமிட்ட குடியேற்றம் , பலவந்தமான குடியேற்றம் என அன்றாட செய்திகளில் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கடிதம் நமக்கும் ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கின்றது . " உங்களால் வானத்தையும் , நிலத்தின் அனலையும் வாங்கவோ அல்லது விற்கவோ எவ்வாறு முடியும் ? உங்கள் சிந்தனை எமக்கு விசித்திரமாக இருக்கின்றது . நாங்கள் சுத்தமான காற்றையும் , பிரகாசமான நீரையும் கொண்டிராவிட்டால் உங்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும் ? இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்காக பூஜிக்கப்பட்டது . பிரகாசிக்கும் ஒவ்வொரு பைன் மரங்களும் , கரையின் மணல் துகள்கள் ஒவ்வொன்றும் , கரும்ப