Skip to main content

இனி வரும் காலம்



கால சுழற்சியின்

பெரு நெருப்பில்

தனிமையின் நிழலாய்

வளர்ந்து செல்லும்

நிசப்தத்தில்

ஆளரவமற்ற வீதி

எதையோ

உணர்த்திச் செல்கிறது

பார்வைக்கு எட்டிய தூரம் வரை

உன் நினைவுகளைத் தவிர

எதுவுமேயில்லை ....


வெயிட்காலப்பொழுதுகளில்

நிழலாய் தொடரும்

உன்னை விலக்கி வைத்துவிட்டு

இருளை விழுங்கி

பயங்கர மௌனத்தையும்

அச்சத்தையும்

பிரசவிக்கும்

கொடுரமான தனிமையில்


பயணிக்கிறேன் ....

எஞ்சியிருக்கும் வாழ்வில் ........

Comments

  1. //இருளை விழுங்கி

    பயங்கர மௌனத்தையும்

    அச்சத்தையும்

    பிரசவிக்கும்

    கொடுரமான தனிமையில் //



    நல்லாவே எழுதறீங்க தல

    ReplyDelete
  2. நன்றிண்ணா! தலைன்னெல்லாம் சொல்லாதீங்க! அனுபவத்துல வருது!

    ReplyDelete
  3. கோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)

    ReplyDelete
  4. //கோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)//

    நல்ல வேளை என் கவிதையைப் பார்த்து பயந்துட்டீங்களோன்னு நினைச்சேன்... நன்றி நண்பா...

    ReplyDelete

Post a Comment