Skip to main content

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

ந்தசாமிசுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம். கடைசியாக வெளிவந்த விக்ரமின்பீமாதிரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில், புதிய இயக்குநர்களின் வரவு, சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது. படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன. படபூஜைக்கான அழைப்பிதழ், படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில், படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது.

தர்க்கரீதியாக
பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை. சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம். மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது. கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை. சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமியைப் பயன்படுத்தி இயக்கியிருக்கிறார். படம் முழுக்க விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருக்கின்றது. ஒரு சி.பி. அதிகாரியாக வரும் காட்சிகளிலும், மக்களுக்கு உதவும் கந்தசாமி பாத்திரத்திலும் சரி நடிப்பு பிரமாதம். சிறப்பாக மெக்சிக்கோவில் கண்ணைக் கட்டிக் கொண்டு செய்யும் சண்டைக் காட்சி. கனல் கண்ணனுக்கும் பாராட்டுக்கள் சேர வேண்டும். சண்டைக் காட்சிகள் என்றாலே எல்லோரையும் பறக்க வைக்கும் கனல் கண்ணன் பறக்காமல் ஒரு சண்டைக்காட்சியை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே. விக்ரம் கதைக்கு ஏற்றவாறு உடம்பை நன்றாக தேற்றியிருக்கின்றார் (நேற்று திரையரங்குக்கு என்னோடு படம் பார்க்க வந்த நண்பர்களில் ஒருவர் இன்று முதல் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்லப் போவதாக கூறும் அளவுக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அத்துடன், விக்ரம் கொக் கொக் கொக் கந்தசாமியாக வரும் இடங்களிலும், பெண் வேடத்திலும், கிழவர் வேடத்திலும் கலக்கியிருக்கின்றார். ஆனால் கிழவர் வேடத்தில் அவர் தோன்றும் காட்சி மிக சில விநாடிகளே இருப்பதுடன், விக்ரமின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அந்த வேடத்தில் வழங்கப்படவில்லை. (அந்த வேடத்தில் நடிப்பதற்கு அவருக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கலாம் அல்லது அந்த காட்சியைத் தவிர்த்து அந்த காட்சிக்கான பொருத்தமான வேறு உபாயத்தை இயக்குநர் கையாண்டிருக்கலாம்). விக்ரமின் நண்பர்களாக வருபவர்களில் சிலர் புதுமுகங்கள் என்றாலும், அவர்களது பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள்.
விக்ரமை விடுத்து படத்தில் வரும் ஏனைய நட்சத்திரங்களின் பங்களிப்பு ஒரளவுதான் பொருந்தியிருக்கின்றது. படத்தின் கதாநாயகி ஸ்ரேயா மழை திரைப்படத்தில் இருந்து இன்று வரை இடுப்பாட்டத்தில் மாத்திரம் தான் தேறியிருக்கிறார். பெர்ரிதான சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நடிப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. கதையின் பிரகாரம் அவருக்கு நடிப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், இயக்குனர் அவரை நடிக்கவைக்க முயற்சிக்கவில்லையா அல்லது முடியவில்லையா என்பது சுசிகணேசனுக்கு மாத்திரமே தெரிந்த ரகசியம். படத்தில் கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் அமைந்திருக்கின்றன. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை தனித்து ஒரு நகைச்சுவை கலாட்டாவாக பார்த்து சிரிக்கலாம். வடிவேலு புதிதாக எதுவுமே செய்துவிடவும் இல்லை. வழமை போலவே எல்லோரிடமும் அடிவாங்கும் ஒருவராக (கொஞ்சம் புதிய முறைகளில்) வந்திருக்கின்றார். இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் மற்றவர்கள் அடிவாங்குவதை பார்த்து தமிழ் திரைப்பட ரசிகர்கள் சிரிப்பார்கள் என இந்த நகைச்சுவை நடிகர்கள் நினைக்கப் போகிறார்களோ தெரியவில்லை. முற்றுமுழுதாக அருவருப்பான விடயமாகவும், இரட்டை அர்த்தங்கள் நிறைந்ததாகவும் இந்த நகைச்சுவைக் காட்சிகள் மாறிவருகின்றன. அதைத்தவிர படத்துடன் அவ்வளவாக அவருடைய நகைச்சுவை பொருந்தவில்லை. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை கத்திரித்துவிட்டு படத்தை பார்த்தால் ஒரளவு சீரியஸான படமாகவும், கொஞ்சம் நீளத்தில் அளவான படமாகவும் வந்திருக்கும்.

படத்தில் மெசிக்கோ அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றது. பாடல்களில் ஸ்ரேயா தோன்றும் காட்சிகள் (பாடல்கள் உட்பட), மெச்கிக்கோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் என மிகவும் சில இடங்களில் மாத்திரமே ஒளிப்பதிவாளரின் கைவரிசை வியக்க வைக்கின்றது. பாடல்களைப் பற்றி சொல்வதானால் எல்லாப் பாடல்களிலும் கொஞ்சம் மேற்கத்தைய வாசனை கலந்திருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் சில மேற்கத்தைய பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. பாடல் காட்சிகளைப் பொறுத்தவரையில் “ஏ” சான்றிதழ் கொடுக்கலாம். பம்பரக் கண்ணாலே பாடலுக்கு “ஏ பிளஸ்” சான்றிதழ் தான் கொடுக்க வேண்டும்(இலங்கையில் வயதுவந்தவர்களுக்கான படங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாடல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படாதது???????). பாடல் வரிகள் பற்றி சொல்லவேத் தேவையில்லை, விவேகாவின் மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாடல் மஞ்சள் பத்திரிகைகளில் வெளிவருவதற்கான முழுத் தகுதியையும் கொண்டிருக்கின்றன. தமிழ் திரைப்பட உலகில் சிறந்த பல திரைப்படங்கள் உருவாகி வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பாடல் காட்சிகளும், பாடல் வரிகளும் எந்த நோக்கத்தைக் கொண்டு வெளியிடப்படுகின்றன என்பது அடுத்த கேள்வி. வர்த்தகமயமாக்குவதே அதன் காரணம் என்றால், விசத்தையும் இவர்கள் வர்த்தக காரணங்களுக்காக அமுதமாக விளம்பரப்படுத்துவார்களா என்ற கேள்வியும் கூடவே.

படத்தொகுப்பும் அவசரமாக செய்யப்பட்டதாகவே உள்ளது. சில காட்சிகள், பாடல்கள் முடிவடைந்து அடுத்த காட்சிகளுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் விஸ_வல் ஜேர்க் எனப்படும் தொழில்நுட்ப தவறை காணக் கூடியதாகவுள்ளது. படம் வெளிவருவதற்கு நீண்டகாலம் எடுத்த போதிலும் இவ்வாறான தொழில்நுட்ப தவறுகள் தேவைதானா?

இயக்குநரிடம் சில கேள்விகள்- ஸ்ரேயாவை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்த காரணம்? வடிவேலுவின் காட்சிகள் படத்துக்கு அவசியமா? ஓளிப்பதிவாளருக்கு கைநடுக்கம் உள்ளதா? பாடல் வரிகளின் அர்த்தம் உங்களுக்கு புரிந்ததா? நுpறைய ஆங்கிலப் படம் பார்ப்பவரா நீங்கள்? (இதெல்லாம் இயக்குநர் வாசிப்பாரோ?, இல்லையோ? தெரியாது. ஆனால், நமக்குள்ள தோன்றிய கேள்விகள். அவ்வளவுதான். உங்களுக்கு படம் பார்த்தப்போ ஏதும் கேள்வி கேக்கணும்னு தோனியிருந்தா, பின்னூட்டத்துல சேர்த்துவிடுங்கள். ஒரு நூறு கேள்வியாவது இருந்தால், சுசிகணேசனுக்கு சொந்த செலவில் ஒரு தபால் போடலாம்னு எண்ணம்.)

மொத்தத்தில் நல்ல கரு, நல்ல நடிகர்- ஒரு நல்ல திரைப்படத்துக்கான சகல தொழில்நுட்ப குழு என்ற அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் சுமாரான, ஒரு தடவை பார்ப்பதற்கான திரைப்படம் கந்தசாமி.
க…க….க….கந்தசாமி- கொக் கொக் கொக் கொஞ்சம் பார்க்கலாம் சாமி….

குறிப்பு: படத்தை ஒருமுறையாவது திரையரங்கில் பாருங்கள். கலைப்புலி தாணுவின் பல கோடிகள் படத்தில் (படத்தில் காட்டப்பட்ட பல கோடிகளைப் போன்ற).

Comments

  1. ரொம்ப யோசிக்க வைச்சுடீங்க....படம் பார்த்து விட்டு...என் கருத்துகளை பின் குறிப்பாக சேர்த்து விடுகிறேன்...

    ReplyDelete
  2. அவை ஆசைக்குச் செலவழிக்கினம் எண்டதுக்காக நாங்களும் அவை பாவம் எண்டு எங்கட காச வீணாக்க முடியுமே? நான் சொல்றது என்னெண்டா அந்தக் காசுக்கு நாளு பேருக்கு உதவி செய்யுங்கோ - மற்றது இப்படிப் படமெடுத்தால் அது வீண் எண்டதை தயாரிப்பாளர் விளங்கிக்கொள்ள வேணும், அவருக்கும் இனி தயாரிக்க இருக்கிறவங்களுக்கும் இது நல்ல பாடமா இருக்கட்டும். கந்தசாமி பார்க்கிறவனும் எடுத்தவனும் எல்லாரும் ஆயிட்டினம் நொந்தசாமி.

    ReplyDelete
  3. பாரக்க மிக ஆவலாக இருந்தேன். இப்பொழுது யோசிக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  4. I just dont understand why everybody is blaming the story.If the same sick love story is told in different ways we are happy to watch .and if the corruption story is told in different way we cant accept because of our pyschology.We should welcome the new attempts
    and encourage.

    ReplyDelete
  5. //ரொம்ப யோசிக்க வைச்சுடீங்க....படம் பார்த்து விட்டு...என் கருத்துகளை பின் குறிப்பாக சேர்த்து விடுகிறேன்...//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி AUM - The Unique,

    ReplyDelete
  6. //அவை ஆசைக்குச் செலவழிக்கினம் எண்டதுக்காக நாங்களும் அவை பாவம் எண்டு எங்கட காச வீணாக்க முடியுமே? நான் சொல்றது என்னெண்டா அந்தக் காசுக்கு நாளு பேருக்கு உதவி செய்யுங்கோ - மற்றது இப்படிப் படமெடுத்தால் அது வீண் எண்டதை தயாரிப்பாளர் விளங்கிக்கொள்ள வேணும், அவருக்கும் இனி தயாரிக்க இருக்கிறவங்களுக்கும் இது நல்ல பாடமா இருக்கட்டும். கந்தசாமி பார்க்கிறவனும் எடுத்தவனும் எல்லாரும் ஆயிட்டினம் நொந்தசாமி.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என்.கே.அஷோக்பரன் , உங்கள் கருத்துக்களுடன் நானும் உடன்படுகின்றேன். இருந்தாலும் திருட்டு டீவீடீக்கள் அல்லது வீசிடீக்கள், நாட்டின் புலமைச்சொத்து சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை. அதனை தவிர்க்க வேண்டும் என்ற வகையிலேயே, அந்த குறிப்பை இட்டேன்.

    ReplyDelete
  7. //பாரக்க மிக ஆவலாக இருந்தேன். இப்பொழுது யோசிக்க வேண்டியுள்ளது.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, Dr.எம்.கே.முருகானந்தன்

    ReplyDelete
  8. //I just dont understand why everybody is blaming the story.If the same sick love story is told in different ways we are happy to watch .and if the corruption story is told in different way we cant accept because of our pyschology.We should welcome the new attempts and encourage.//

    Thx 4 ur comments n visitin. i agree wit u, v shud encourage their attempts. there r sme gd msgs in this film and the same tym minus points too. i tried 2 idendify those minus.

    ReplyDelete
  9. well said but it is nice

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல...

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்...

நினைவு உருமாற்றம்....

என் காதலில் உனக்கான இடத்தை வெறுமைப்படுத்த முடியாது ஆழ்ந்து கிடக்கிறது அறிவு.... என்னை மறந்து உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கும் நினைவு உருமாற்றத்தை செய்து விட்டு போய்விடுகிறது காதல்...... உன் மீதான காதலின் அறிகுறியாய் உறக்கம் இன்றி கலைந்த இரவுகளும், நட்சத்திரங்களை தேடிக் கதைத்த தனிமையும் என்னோடு நீங்காமல் இருக்கின்றன. உன்னால் நிராகரிக்கப்பட்ட காதலின் கனவுகள் ஆளில்லா வெளியில் விரவி உறக்கத்தை திருடிக் கொண்டிருக்கின்றன...... நீ வசிக்கும் தெருமுனை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் இதயம் திரும்பிப் பார்க்கின்றது. நீ நடந்து சென்ற வழியில் பூத்துக் கிடக்கும் என் காதலை...