Skip to main content

Posts

Showing posts from 2009

உன்னை மாத்திரம்

வார்த்தைகளை கோர்த்துக் கொடுத்துவிட்டு ஒரு மூலையில் போய் அமர்ந்து விடுகின்றது இந்த பாழாய்ப் போன புத்தி, சில அழகிய தவறுகளையும்……… இன்பமான வேதனைகளையும்…….. புரிந்து கொண்டே… என்னை தடுத்து நிறுத்தாமால் வழி நடத்திக் கொண்டிருக்கின்றது என் புத்தி…… அலுவலகப் பணியில் அப்படியே மூழ்கி கிடைக்கும் ஒரு விநாடி ஒய்வில் சோம்பல் முறிக்க, தொற்றிப் பிடித்து ஏறி உட்கார்ந்து கொள்கிறாய் நினைவலைகளில்…. எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது… இந்த நினைவுக் கொள்ளை….. எதையும் யோசிக்காது கடந்து போய்க் கொண்டிருக்கும் காலத்தினை நிறுத்தி கழுத்தில் பிடித்து, அப்படியே இடமிருந்து வலமாக சுற்றி ஒரு சில ஆண்டுகள் பின்னே போய் பார்க்க வேண்டும்…. மீண்டும் ஒருமுறை உன்மீதான காதலை நான் வெளிப்படுத்திய அந்தப் பொழுதை…. கைகள் வியர்க்க, இதயத்துடிப்பு அதிகரிக்க, சொற்கள் தடுமாற, அந்த ஒரு வார்த்தையை சொல்ல குறைந்தது முன்னூறு விநாடிகள். எப்படியும் சொல்லிவிடுவெதன்ற நினைவில் சொல்லிவிட்டு…. பூமி பார்த்து கொஞ்ச நேரம் நாணம்….. அட, அந்த கணமே உன் முகம் பார்த்து உன் பதிலை புரிந்து கொண்டிருந்தால்…….. இல்லை… இன்னும் வேகமாக இடமிருந்து வலம் சுற்றி…..

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

நினைவு உருமாற்றம்....

என் காதலில் உனக்கான இடத்தை வெறுமைப்படுத்த முடியாது ஆழ்ந்து கிடக்கிறது அறிவு.... என்னை மறந்து உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கும் நினைவு உருமாற்றத்தை செய்து விட்டு போய்விடுகிறது காதல்...... உன் மீதான காதலின் அறிகுறியாய் உறக்கம் இன்றி கலைந்த இரவுகளும், நட்சத்திரங்களை தேடிக் கதைத்த தனிமையும் என்னோடு நீங்காமல் இருக்கின்றன. உன்னால் நிராகரிக்கப்பட்ட காதலின் கனவுகள் ஆளில்லா வெளியில் விரவி உறக்கத்தை திருடிக் கொண்டிருக்கின்றன...... நீ வசிக்கும் தெருமுனை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் இதயம் திரும்பிப் பார்க்கின்றது. நீ நடந்து சென்ற வழியில் பூத்துக் கிடக்கும் என் காதலை...

அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய இருசக்கர வாகனம் ( மோட்டார் சைக்கிள்) களவாடப்பட்டுவிட்டது. அல்லது என்னுடைய கவனயீனம் அந்த களவுக்கு துணைபுரிந்துவிட்டது. 6 மாதங்கள் திட்டமிட்டு வாங்கிய அதனை 2 வாரங்களே பயன்படுத்தினேன். இதனை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமிருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துவிட்டன . இருந்தாலும் நண்பர்கள் , உறவினர்கள் என்று என்னில் அக்கறைகொண்ட பலர் தொலைபேசியூடாக அல்லது நேரடியாக தொடர்புகொண்டு தமது துயரத்தை பகிர்ந்துகொண்டனர் . துயரம் தெரிவித்த பலர் சொன்ன விடயம் “ மச்சான் உனக்கு லக் இல்லடா ” என்பதாகும் . இந்த அதிர்ஷ்டம் (லக்) என்றால் என்ன? இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் முட்டாள்களுக்கான நியாயப்படுத்தல்களின் கருவிகள் என்பது என்னுடைய எண்ணம் . ஒரு மனிதனுடைய முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அவனது முயற்சியின் அளவை பொறுத்தது அந்த பலனின் அளவும். இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் ஒரு மனிதனின் எண்ணங்களையும், நடத்தையையும் பொருத்தே அமைகின்றன என்கிறார் ஹேர்ட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன்

405

மலை தொடும் முகிலையும், வெயில் விரித்த நிழல் போர்வையின் மனம் தொடும் அழகையும் பார்த்து, ரசித்து உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது, பனி நிறைத்த பச்சைநிற பசிபோக்கும் தாவரங்களின் தலையொடித்து உயிர் வாழ, 405க்காய் உழைப்பு சேர்க்கும், சிறகுகளற்ற மலைக்குருவி நான்... என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும் ஒரு நாளின் இரு பொழுதில், சில நேரம் ஒரு பொழுதில், சில நேரம் வெறும் வயிறாய், ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே, ஏதோ தேயிலை தரும் சாயத்தை உயிர் கடத்த உழுகின்றோம்… உலகெல்லாம் பல பேராய் பொழுதிறங்கி பேச்சளக்க கொஞ்சம், களைப்பிறக்க நாம் பறிந்த கொழுந்துகள் உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக, பல சுவையேற்றப்பட்டு, இன்னும் நாங்கள் சீனியற்ற வெறுஞ்சாயத்தை சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ? என் அப்பன், அவன் அப்பன், அவனுக்கும் அப்பன், இன்னும்…. என் பிள்ளை, அவன் பிள்ளை, அவனுக்கும் பிள்ளை இன்னும்….. முடிந்ததும், தொடர்வதும்…. அந்த சில சதுர அடி அறையில், அடைபட்டு நா அடக்கப்பட்டு….. உழைத்து நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே, எட்டாய் வளைந்து.... ஊதியம் உயர்த்திக் கேட்கும், பின் 405இல் ஏதோ ஒரு கை அடக்கும்… ஊர்க்காரன் தொழி

ஓக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்

1966 ஒக்ரோபர் 21 எழுச்சி இலங்கைத் தமிழர்களின் சாதிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு புரட்சிகர எழுச்சியாகும். சாதியத்தையும்- தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அவ் எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்ட வெகுஜனப் போராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களைப் பிணைத்திருந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிந்தது. ஜனநாயக மனித உரிமைகளை வென்றெடுத்து சமத்துவத்தையும் சமூக அந்தஸ்தையும் நிலை நாட்டியது.இவ் ஒக்ரோபர் 21எழுச்சி இடம் பெற்று நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இன்றைய இளம் தலைமுறையினர் அன்றைய போராட்டங்களின் முக்கியத்துவமோ அவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருந்த சாதிய-தீண்டாமைக் கொடுமைகள் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் கூட சாதியக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெவ்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கும் போது அவற்றின் அன்றைய தீவிரத்தையும் சமூகத் தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். கடந்த நூற்றாண்டின் முற்கூற்றிலிருந்து வடபுலத்திலே சாதியத்திற்கு எதிரான உணர்வுகள் வெளி வெளியான குரல்களாகி வளர ஆரம்பித்தன. ஐ

தேவதையிடம் 10 வரங்கள்: காதல் விண்ணப்பம்

பொதுவாகவே , இந்த தேவதை , கடவுள் , வரங்கள் போன்ற சமாச்சாரங்களில் துளியளவும் நம்பிக்கை இல்லாதவன் நான் . இருந்த போதிலும் , சகா லோகநாதன் அனுப்பிய தொடர்பதிவுக்கான சங்கிலியை எவ்விதத்திலும் துண்டாடி விடாது , அவரது அழைப்புக்கான கௌரவமாக இந்த பதிவை இடுகின்றேன் . இங்கு நான் வரம் கேட்பதற்காக அணுகும் தேவதை கொஞ்சம் மாறுபட்டவள் . சிறு வயதில் பாட்டி சொல்ல கேட்ட தேவதை கதைகள் , அதைத் தொடர்ந்து கனவில் வந்து பணக்காரனாக , நடிகனாக , விளையாட்டு வீரனாக , கவிஞனாக என என்னை மாற்றிய தேவதைகள் நிறையவே உண்டு . கையில் ஒரு மந்திரக்கோல் , இறக்கைகள் , வெள்ளைநிற உடை , சுற்றி பிரகாசம் என்று கற்பனையிலும் , திரை காட்சியிலும் கண்ட தேவதைகளின் உருவம் இது . இவையெல்லாவற்றையும் விட, இந்த வயதில் என்னில் (எம்மில்) வரும் தேவதையிடம் (அதுதான் புரியலையா, காதலி) கேட்கும் வரங்கள் என்று சொன்னால், 10 என்பது கொஞ்சம் அதிகம் தான். என்னைப் பொறுத்தவரையில் இந்த தேவதையும், இன்று வரையில் வெறும் கனவாகவே இருப்பதனால், இன்னும் சிக்கல் தீர்ந்தபாடாயில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில், இறுதியாக என்

உன்னைப் போல் ஒருவன் - MISSING COMMON MAN....

உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தை பார்த்தவுடனேயே, அந்த படம் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பில் என் நண்பர் ஒருவரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். அந்த கருத்துக்களில் சிலவற்றில் என்னுடன் உடன்பட்ட நண்பர், சில கருத்துக்களில் எதிர்ப்பு தன்மையையும் வெளிப்படுத்தினார். தமிழ் திரைப்படம் ஒன்று வெளியானால் அது குறித்த விமர்சனங்கள் பலவிதத்திலும் வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என்று சொன்னால் மிகையாது.அதுவும் அண்மைக்காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் பதிவுலகின்(வலைப்பூக்களின்) பங்கு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் அந்த வலைப்பூக்களில் தனிமனிதர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதும், அது குறித்த பின்னூட்டங்கள் பகிரங்கமான, சுதந்திரமான கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. எவ்வாறாயினும், அண்மையில் நான் வாசித்த வலைப்பதிவொன்றில் “வலைப்பூக்களின் வருகையால் சினிமா (விசேடமாக இந்திய திரைப்படங்கள் சார்பாக) சார்ந்ததாக இயங்கி வந்த இணையத்தளங்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவகையில் நானும் அதனை ஏற்றுக் கொள்கின்றேன். என்னுட

மாவை வரோதயனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகில் மற்றுமொரு பாரிய இழப்பாகும்.

என்னுடைய எழுத்துக்களுக்கு முதலாவது ரசிகராகவும், விமர்சகராகவும், அவற்றிலும் பார்க்க நான் எழுதுவதற்கு பிரதான காரணங்களாக இருந்தவர்களில் ஒருவரான மாவை வரோதயனின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். அவருக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது மறைவுக்காக விடுத்துள்ள ஊடங்களுக்கான செய்திக் குறிப்பை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். ஊடக செய்திக் குறிப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றி வந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும், விமர்சகரும், நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி.சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பெரவையின் சஞ்சிகை

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றைய தினத்துடன் (25-08-2009) வானியலின் தந்தை கலீலியோ கலிலி தொலைநோக்கி என்ற அரிய பொருளை கண்டுபிடித்து 400 வருடங்கள் பூர்த்தியாகின்றன . அதன் நினைவாக , கலீலியோ கலிலியின் தொலைநோக்கி கண்டுபிடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த வானியல் சாதனைகள் தொடர்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றியது . 1609 ஆம் ஆண்டில் கலீலியோ என்ற வானியலாளர் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தியதன் 400 ஆவது ஆண்டு கொண்டாட்டமாக இந்த ஆண்டு (2009) சர்வதேச வானியல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இந்த கட்டுரை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் . 1608 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட போதிலும் கலீலியோதான் நல்ல திறனுடைய தொலைநோக்கிகளை உருவாக்கினார் . கலீலியோ தொலைநோக்கிகளை உருவாக்கியதோடு நிற்கவில்லை . அதைக் கொண்டு வானை ஆராய முற்பட்டார் . வானில் நம் கண்ணால் பார்க்கக்கூடிய பூமியின் துணைக்கோளான சந்திரனில் தொடங்கி , பிறகோள்கள் , நட்சத்திரங்கள் , வானில் பறக்கும் எரிகற்கள் என அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினார் . கவனித்ததோடு நில்

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய