உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தை பார்த்தவுடனேயே, அந்த படம் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பில் என் நண்பர் ஒருவரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். அந்த கருத்துக்களில் சிலவற்றில் என்னுடன் உடன்பட்ட நண்பர், சில கருத்துக்களில் எதிர்ப்பு தன்மையையும் வெளிப்படுத்தினார். தமிழ் திரைப்படம் ஒன்று வெளியானால் அது குறித்த விமர்சனங்கள் பலவிதத்திலும் வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என்று சொன்னால் மிகையாது.அதுவும் அண்மைக்காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் பதிவுலகின்(வலைப்பூக்களின்) பங்கு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் அந்த வலைப்பூக்களில் தனிமனிதர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதும், அது குறித்த பின்னூட்டங்கள் பகிரங்கமான, சுதந்திரமான கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. எவ்வாறாயினும், அண்மையில் நான் வாசித்த வலைப்பதிவொன்றில் “வலைப்பூக்களின் வருகையால் சினிமா (விசேடமாக இந்திய திரைப்படங்கள் சார்பாக) சார்ந்ததாக இயங்கி வந்த இணையத்தளங்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவகையில் நானும் அதனை ஏற்றுக் கொள்கின்றேன். என்னுட...
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...