Skip to main content

Posts

Showing posts from 2011

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்புமரமொன்றில் கீறி காயம் செய்ததுஅந்த அம்புமுன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்துதீட்டப்பட்டதாம்அதுவே, பின்பொரு நாளில்மரத்தில் கீறி காயம் செய்ததாம்!காடுகள் சுற்றி தேடுதல் செய்து,கதைகள் பல சொல்லிதீட்டப்பட்ட, தீட்டப்படாதஅம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன…காலங்கள் ஓடி ஒழியஇன்றைப் போல் ஒரு பொழுதில்,அடைத்த அம்புகள் சிலவற்றின்கூர் முனைகள் ஒடிக்கமரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்!ஒன்றைப் போல் வேறு மரத்தில்விளைந்த இந்த அம்புகள்முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து,அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும்வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்!எதுவாயினும்,நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்!அம்புகள் கூராக்கப்படுவதும்,விற்கள் வளைக்கப்பட்டுஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும்பின் மாறி,ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும்,எதுவும் நடக்கலாம் …..(இது அரசியல் கவிதை அல்ல)

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது

அனைவருக்கும் வணக்கங்கள்!
இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்தி…