Skip to main content

Posts

Showing posts from June, 2010

இலங்கை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2010-மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

மக்களிடையே அருகியுள்ள புத்தக வாசிக்கும் திறனை வளர்க்கவும், ஈழத்து நூல்களினை இளஞ் சமுதாயத்தினர் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தேசிய கலை இலக்கியப் பேரவையின், கொழும்பு பேரவை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா-2010ஐ ஏற்பாடு செய்துள்ளது. நாளை தொடக்கம் மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஈழத்து நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறவுள்ளதோடு, தினந்தோறும் தெரிந்தெடுக்கப்பட்ட ஈழத்து இலக்கியங்கள் நான்கு மாலை நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடகம், கவியரங்கம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள். அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்! மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும் இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை , 571/15 காலி வீதி , வெள்ளவத்தை . ( றொக்சி திரையரங்கிற்கு முன் ) காலம் 18,19,20–06–2

சே. நீ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்....

விடுதலையை விரும்பும், சுதந்திரத்தை விரும்பும், தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் ஆதர்சனமாக இருக்கும், ஒரே மந்திரச் சொல் ‘சே’. 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் ஆர்ஜண்டீனாவின் ரொஸாரியோவில் எர்னெஸ்டோ குவேரா மற்றும் ஸெலியா டி லா செர்னா ஆகியோர் இந்த புரட்சிக் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். உலகெங்கும் உள்ள புரட்சி ஆர்வலர்களால் ‘சே(நண்பா அல்லது சகா)’என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரிய ஒரே மனிதன். பதவி கிடைத்தவுடன் தம்மை கடவுள்களாக அறிவித்துக் கொள்ளும் உலகில். தமக்கு கிடைத்த உயரிய பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுடன் இணைந்து, மக்கள் போராட்டத்துக்காக உயிர் துறந்த மனிதன். வாழ்நாளின் இறுதி வரை (1967, ஒக்டோபர் 9ஆம் திகதி) மக்களைப் பற்றிய சிந்தித்து மக்களில் ஒருவனாகவே மரித்த மாபெரும் செயல்வீரர் சே. புரட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, எந்தவொரு செயலிலும் தீவிர மனவுறுதியுடன் செயற்படுபவர்களுக்கும் சே என்ற சொல் மறக்க முடியாதது. சே என்ற மந்திரச் சொல்லை உச்சரித்து வரும் கோடிக்கானவர்களில் நானும் ஒருவன். சேயின் 82ஆவது பிறந்தநாள் அன்று பலரும் அவரைப