Skip to main content

Posts

Showing posts from July, 2009

நிபிரு - தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் – 2

நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணம் பலவழிகளிலும் அச்சத்தையும் , பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாக மாறியுள்ளது. சூரிய கிரகணம் தொடர்பில் நேற்று நாடு எழுதியிருந்த பதிவுக்காக பல இணையத்தளங்களிலும் விடயங்களை சேகரித்துக் கொண்டிருந்த போது "நிபிரு" என்ற விடயம் மிகுந்த அவதானத்தை செலுத்தக் கூடிய விடயமாகவிருந்தது. நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணத்திற்கும் , நிபிரு வுக்கும் இடையிலான தொடர்புகள் அரிதானதாக காணப்படுகின்ற போதிலும் , அடுத்து வரும் வருடங்களில் பேசப்படப் போகின்ற ஓரு விடயப் பொருளாக நிபிரு விளங்குகின்றது. http://6thscientific.blogspot.com/ என்ற வலைப்பதிவில் நிபிரு தொடர்பான தகவல்கள் சில சிக்கின. அந்த தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் கீழே தருகின்றேன். குறித்த வலைப்பதிவரின் எண்ணம் , அனைவர் மத்தியிலும் இந்த விடயத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இருப்பதால் அவரது அனுமதியின்றியே எனது வலைத்தளத்தில் அவரது பதிவை மீள்பதிவு செய்கின்றேன். அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கோலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்கள

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நாளை மறுதினம் (22-07-2009) ஏற்படப் போகின்றது . சூரியனுக்கும் , பூமிக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை மறைக்கும் நிமிடங்களைத் தான் சூரிய கிரகணம் என்று நாம் சொல்கின்றோம் . சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்த கிரகணம் 5 மணித்தியாலங்களும் 14 நிமிடங்களும் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . இலங்கை நேரப்படி காலை 05.28 மணிக்கு ஆரம்பிக்கும் சூரிய கிரகணம் காலை 10.42 மணி வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது . இவ்வாறான சூரிய கிரகணம் , அடுத்து 2132 ஆம் ஆண்டே ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது . நீண்ட நேரம் சூரிய கிரகணம் தென்படவுள்ளமையால் , சூரிய கிரகணத்தை காணக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் வைரமோதிரம் என்ற அரியவகை சூரிய கிரகண நிகழ்வை காணலாம் எனவும் கூறப்படுகின்றது . சந்திரன் சூரியனை முழுமையாக மறைப்பதற்கு சற்று முன்னர் சூரியனின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பெரிய ஒளிக்கீற்று ஒன்றும் , சூரியனின் சுற்றுவட்டமும் பார்ப்பதற்கு வைரமோதிரம் போல் காட்சியளிக்கும் . இந்தியாவின் , பீகார் ம