Skip to main content

Posts

Showing posts from January, 2010

மாறா மன ஆட்சி....

பிடிவாதமும் சுயநலங்களும் பேயாய் என்னைத் தொடர வலுவிழந்த ஒற்றை உயிரோடு நிழல் தேடி ஓடுகின்றேன்..... காற்று அடைத்த கங்குல் நிஷ்டையில் ஓயாத அசரீரியாய் அந்த வார்த்தைகள்...... துவண்டு தோள் தளர்ந்து உயிர் விழ.... பிம்பங்கள் அறுத்தெறிந்து எண்ணம் முறுக்கி விடைத்தெழ..... உருண்டோடும் இறந்தகாலத்தை தோண்டியெடுத்துக் கொண்டு மீண்டும் எட்டிப் பார்க்கும் பிடிவாதமும் சுயநலங்களும்...........

ஜனநாயகத்திற்கு ஒரு கடிதம்.................

அன்புள்ள ஜனநாயகத்திற்கு, ஜனநாயக நாடொன்றின் குடிமகன் எழுதிக் கொள்வது. நலம், நலம் அறிய ஆவல் என்று தொடங்க முடியவில்லை. நீயில்லாத நாட்டில் நாங்கள் நலமோடு இருப்பது என்பது வெறும் கற்பனைதான். நான் பிறந்து கால் நூற்றாண்டுகளாகிவிட்டது. ஜனநாயகம் என்ற சொல்லை கேள்விபட்டு ஒரு தசாப்தங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. புத்தகங்களிலும், வரலாற்று நூல்களிலும் மாத்திரம் தான் அது எப்படி இருக்கும் என்று அறிந்துள்ளேன். இந்த நாட்டில் உனக்காக காத்திருக்கும் இலட்சம் பேரில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நீ இருப்பதாகவும், நாடெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகவும் பலர் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும்தான் இருக்கின்றார்கள். ஆனால், நான் ஒருபோதும் கண்டதில்லை. இந்த நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். அந்தப் பகுதிகளில் எல்லாம் உன்னை தேடிப் பார்த்திருக்கின்றேன். பலருக்கு உன்னைப் பற்றியே தெரியாது. பலருக்கு உன்னை காண ஆவல். பலருக்கு உன்னைப் பற்றி பேசினாலேயே வெறுப்பாக இருக்கின்றது. என் அப்பா, அவரின் அப்பா என்று எல்லோரிடமும் கேட்டுவிட்டேன் உன்னைப்பற்றி. ஆனால் எவரும் உன்னைப் பார்க்கவில்லை. அதனால் தான் நேரடியாக உனக்கே

ஒரு ஆட்டு(சி)க் கதை......

ஒரு ஊரிலே , பல வெள்ளை ஆடுகளும் , சில கறுப்பு ஆடுகளும் , சில பழுப்பு நிற ஆடுகளும் , இந்த நிறங்கள் கலந்த ஆடுகளும் இருந்தன . நீண்ட காலமாக ஒன்றாகித் திரிந்த இந்த ஆடுகளுக்கு திடீரென ஒரு தலைவன் தேவைப்பட்டான் . எல்லா ஆடுகளும் ஒன்று கூடி நடந்தும் , கிடந்தும் , படுத்தும் , பாய்ந்தும் , மேய்ந்தும் சிந்தித்தன . இறுதியில் எல்லாம் கூடி தேர்தல் ஒன்று நடத்துவதற்கு முடிவெடுத்தன . ஏற்கனவே வெள்ளை ஆடுகளுக்கு தலைவனைப் போல் இருந்த ஆடு , போட்டியின்றி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தது . ஆனால் , இன்னொரு வெள்ளைஆடு , இன்னும் சில வெள்ளை ஆடுகளுடன் சேர்ந்து வேறொரு வெள்ளை ஆட்டை தேர்தலில் போட்டியிட வைத்தது . இதை பார்த்துக் கொண்டிருந்த இன்னும் சில வெள்ளை ஆடுகளும் போட்டி போடுவதற்கு முன்வந்தன . தனித்த ஒரு கறுப்பாடும் , சில பழுப்பு ஆடுகளும் கூட போட்டியிட முடிவு செய்து களமிறங்கின . போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது . வீதிகளில் காகிதம் உண்ணும் ஆடுகளுக்கு , வீடு தேடி புல்லும் , தரமான புண்ணாக்கும் கிடைக்கும் எனவும் , ஆடுகளுக்கு சிறந்த பட்ட