கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய இருசக்கர வாகனம் ( மோட்டார் சைக்கிள்) களவாடப்பட்டுவிட்டது. அல்லது என்னுடைய கவனயீனம் அந்த களவுக்கு துணைபுரிந்துவிட்டது. 6 மாதங்கள் திட்டமிட்டு வாங்கிய அதனை 2 வாரங்களே பயன்படுத்தினேன். இதனை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமிருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துவிட்டன . இருந்தாலும் நண்பர்கள் , உறவினர்கள் என்று என்னில் அக்கறைகொண்ட பலர் தொலைபேசியூடாக அல்லது நேரடியாக தொடர்புகொண்டு தமது துயரத்தை பகிர்ந்துகொண்டனர் . துயரம் தெரிவித்த பலர் சொன்ன விடயம் “ மச்சான் உனக்கு லக் இல்லடா ” என்பதாகும் . இந்த அதிர்ஷ்டம் (லக்) என்றால் என்ன? இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் முட்டாள்களுக்கான நியாயப்படுத்தல்களின் கருவிகள் என்பது என்னுடைய எண்ணம் . ஒரு மனிதனுடைய முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அவனது முயற்சியின் அளவை பொறுத்தது அந்த பலனின் அளவும். இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் ஒரு மனிதனின் எண்ணங்களையும், நடத்தையையும் பொருத்தே அமைகின்றன என்கிறார் ஹேர்ட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன்...
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...