இலங்கை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2010-மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்
மக்களிடையே அருகியுள்ள புத்தக வாசிக்கும் திறனை வளர்க்கவும், ஈழத்து நூல்களினை இளஞ் சமுதாயத்தினர் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தேசிய கலை இலக்கியப் பேரவையின், கொழும்பு பேரவை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா-2010ஐ ஏற்பாடு செய்துள்ளது. நாளை தொடக்கம் மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஈழத்து நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறவுள்ளதோடு, தினந்தோறும் தெரிந்தெடுக்கப்பட்ட ஈழத்து இலக்கியங்கள் நான்கு மாலை நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடகம், கவியரங்கம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள். அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்! மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும் இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை , 571/15 காலி வீதி , வெள்ளவத்தை . ( றொக்சி திரையரங்கிற்கு முன் ) காலம் 18,19,20–06–2...