Skip to main content

இலங்கை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2010-மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

மக்களிடையே அருகியுள்ள புத்தக வாசிக்கும் திறனை வளர்க்கவும், ஈழத்து நூல்களினை இளஞ் சமுதாயத்தினர் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தேசிய கலை இலக்கியப் பேரவையின், கொழும்பு பேரவை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா-2010ஐ ஏற்பாடு செய்துள்ளது. நாளை தொடக்கம் மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஈழத்து நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறவுள்ளதோடு, தினந்தோறும் தெரிந்தெடுக்கப்பட்ட ஈழத்து இலக்கியங்கள் நான்கு மாலை நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடகம், கவியரங்கம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள்.

அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்!

மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15 காலி வீதி, வெள்ளவத்தை.
(றொக்சி திரையரங்கிற்கு முன்)

காலம் 18,19,20–06–2010
(வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்)


நிகழ்ச்சி நிரல்

18.06.2010 (வெள்ளிக்கிழமை)

மு.. 9.00 ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி. 6.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்

தலைமைசைறா கலீல்

நூல்களின் அறிமுகம்
கல்லெறி தூரம்" – கவிதைத் தொகுப்பு : மௌ. மதுவர்மன்
தொடரும் உறவுகள்" - மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிவ மிர்துளகுமாரி
யாழ்பாணத்து நீர்வளம்" – ஆய்வு நூல் சி..செந்திவேல்
மனைவி மகாத்மியம்" – சிறுகதைத் தொகுப்பு : திக்வெல்லைக் கமால்

கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""

19.06.2010 (சனிக்கிழமை)

மு..9.00 - ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.. 5.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்

தலைமைதர்சிகா தியாகராஸா

நூல்களின் அறிமுகம்
நீண்ட பயணம்" – நாவல் : மு மயூரன்
பெண்விடுதலைவும் சமூகவிடுதலையும்" – ஆய்வு : எல்.தாட்சாயினி
முறுகல் சொற்பதம்" – கவிதைத் தொகுப்பு : .இரகுபன்
ஆர்கொலோ சதுரர்" – நாட்டிய நாடகம் : சோ. தேவராஜா

கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""

20.06.2010 (ஞாயிற்றுக்கிழமை)

மு.. 9.00 : ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.. 5.00 : நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்

தலைமை தனுஜன்

நூல்களின் அறிமுகம்
ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்“ – கவிதைத் தொகுப்பு : வி. விமலாதித்தன்
வேப்ப மரம்" – சிறுகதைத் தொகுப்பு : A.R.V.லோஷன்
நாமிருக்கும் நாடே" – சிறுகதைத் தொகுப்புமெ.சி.மோகனராஜன்
செங்கதிர்",“நீங்களும் எழுதலாம்" – சஞ்சிகைகள் : சி.சிவசேகரம்
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""

குறிப்பு : நண்பர்களே! இந்த விபரங்களை இயன்றளவு உங்கள் பதிவுகளிலும், சமூக வலைப்பின்னல்களிலும் பகிர்ந்து, இந்த நிகழ்வு சிறப்புற ஆதரவு தாருங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்திமுறையின்வளர்ச்சிக்கட்டங்களில்தான்வர்க்கவேறுபாடுகள்தோன்றுகின்றன. வர்க்கப்போராட்டம்கண்டிப்பாகபாட்டாளிசர்வாதிகாரத்திற்குவழிவகுக்கும். அந்தச்சர்வாதிகாரமானதுவர்க்கப்பிளவுகளைஒழித்துவர்க்கமற்ற

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…

நிபிரு - தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் – 2

நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணம் பலவழிகளிலும் அச்சத்தையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாக மாறியுள்ளது. சூரிய கிரகணம் தொடர்பில் நேற்று நாடு எழுதியிருந்த பதிவுக்காக பல இணையத்தளங்களிலும் விடயங்களை சேகரித்துக் கொண்டிருந்த போது "நிபிரு" என்ற விடயம் மிகுந்த அவதானத்தை செலுத்தக் கூடிய விடயமாகவிருந்தது. நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணத்திற்கும், நிபிருவுக்கும் இடையிலான தொடர்புகள் அரிதானதாக காணப்படுகின்ற போதிலும், அடுத்து வரும் வருடங்களில் பேசப்படப் போகின்ற ஓரு விடயப் பொருளாக நிபிரு விளங்குகின்றது.
http://6thscientific.blogspot.com/என்ற வலைப்பதிவில் நிபிரு தொடர்பான தகவல்கள் சில சிக்கின. அந்த தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் கீழே தருகின்றேன். குறித்த வலைப்பதிவரின் எண்ணம்,அனைவர் மத்தியிலும் இந்த விடயத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இருப்பதால் அவரது அனுமதியின்றியே எனது வலைத்தளத்தில் அவரது பதிவை மீள்பதிவு செய்கின்றேன்.
அந்தகாலத்திய ஈராக் பகுதிகளில் கோலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம்.இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படி…