நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய்
உறக்கத்தில் விழிக்கின்றது கனவு
எழுதப்படாத மௌனங்கள் அங்கே
வார்த்தைகளாய் பிரவாகிக்க
மிக நெருக்கமாய் நாம்,
வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில்
நெரிசல் இன்றி பயணிக்கும்
நாம் மட்டுமே உலகு,
சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத
சுதந்திரம் அதில்,
தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத
அருகாமை தரும்,
காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத
உறவு நீளும்,
மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும்,
உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும்
கருவி அது,
சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….
உறக்கத்தில் விழிக்கின்றது கனவு
எழுதப்படாத மௌனங்கள் அங்கே
வார்த்தைகளாய் பிரவாகிக்க
மிக நெருக்கமாய் நாம்,
வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில்
நெரிசல் இன்றி பயணிக்கும்
நாம் மட்டுமே உலகு,

சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத
சுதந்திரம் அதில்,
தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத
அருகாமை தரும்,
காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத
உறவு நீளும்,
மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும்,
உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும்
கருவி அது,
சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….
உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும்
ReplyDeleteகருவி அது, superb..