எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு
மரமொன்றில் கீறி காயம் செய்தது
அந்த அம்பு
முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து
தீட்டப்பட்டதாம்
அதுவே, பின்பொரு நாளில்
மரத்தில் கீறி காயம் செய்ததாம்!
காடுகள் சுற்றி தேடுதல் செய்து,
கதைகள் பல சொல்லி
தீட்டப்பட்ட, தீட்டப்படாத
அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன…
காலங்கள் ஓடி ஒழிய
இன்றைப் போல் ஒரு பொழுதில்,
அடைத்த அம்புகள் சிலவற்றின்
கூர் முனைகள் ஒடிக்க
மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்!
ஒன்றைப் போல் வேறு மரத்தில்
விளைந்த இந்த அம்புகள்
முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து,
அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும்
வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்!
எதுவாயினும்,
நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்!
அம்புகள் கூராக்கப்படுவதும்,
விற்கள் வளைக்கப்பட்டு
ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும்
பின் மாறி,
ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும்,
எதுவும் நடக்கலாம் …..
நல்ல உவமானமும், சுடும் கவிதையும்..
ReplyDeleteகூர்மையாக்கப்பட்ட அம்புகள்போல் உங்கள் வார்த்தைகள் என் இதயத்தைத் துளைத்தன
ReplyDeleteநன்றிகள் Mohamed Faaique, அம்பலத்தார்
ReplyDelete