Skip to main content

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்தி முறையின் வளர்ச்சிக் கட்டங்களில் தான் வர்க்க வேறுபாடுகள் தோன்றுகின்றன. வர்க்கப் போராட்டம் கண்டிப்பாக பாட்டாளி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். அந்தச் சர்வாதிகாரமானது வர்க்கப் பிளவுகளை ஒழித்து வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்ற உண்மையை இந்த உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு மனிதன் பிறந்த நாள் இன்று.

கார்ல் மாக்ஸ் - யூதனாக பிறந்து, கிறிஸ்தவனாக வளர்ந்து, மனிதனாக மரித்துப் போனவர். அவரது வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது லகுவான விடயம் அல்ல. இதனை வாசிப்பவர்கள் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒரளவு அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிதான் இந்த பதிவு.

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக உள்ள புருசியாவில் ட்ரையர் என்ற நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஹென்றி மார்க்ஸ், தாயின் பெயர் ஹென்ரிட்டா. தந்தை பிரபலமான சட்டத்தரணியாக இருந்தமையால், தந்தையின் வற்புறத்தலுக்காக சட்டம் பயின்ற கார்ல் மார்க்ஸ், வரலாறு, மெய்யில் துறைகளிலும் லாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார்.

பல்கலைக்கழக படிப்பைத் தொடர்ந்து மார்க்ஸ் சில காலம் ஜெர்மனியின் எதிர்க்கட்சி பத்திரிகையான றைனி ஸைற்றுங் பத்திரிகையில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த காலப் பகுதியில் தான் 17 வயதான மார்க்ஸ், 21 வயதான ஜென்னியுடன் காதல் வயப்பட்டார். ஜெர்மனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வாரிசான ஜென்னியை 8 வருடங்களாக காதலித்துப் பின் மார்க்ஸ், திருமணம் செய்துகொண்டார். தொழிலாளர்கள் நலன் தொடர்பிலும், அடக்குமுறைக்கு எதிராகவும் தமது ஆக்கங்களை வெளியிட்டு, தொழிலாளர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கியமையால் 1843ஆம் ஆண்டிற்கும், 1849ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு மார்க்ஸ் நாடுகடத்தப்பட்டிருந்தார்.

பிரான்ஸின், பெரிஸ் நகரிற்கு நாடு கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் 1944ஆம் ஆண்டில் பிரெட்ரிக் ஏங்கல்ஸை சந்தித்தார் மார்க்ஸ். இந்த நட்பு மார்க்ஸின் இறுதிக் காலம் வரை நீடித்தது. எதிர்காலத்தில் மார்க்ஸ் சந்தித்த பல பிரச்சினைகளில், உதவியாக இருந்து, இன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படைக் கல்வி நூலாக இருக்கும் மூலதனம் என்ற நூல் வெளிவருவதில் பெருந்துணையாக இருந்தவர் ஏங்கல்ஸ். இவர்கள் இணைந்து முதலாளித்துவத்துக்கு எதிராக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பொதுவுடைமைச் சங்கத்தை அமைத்தனர். இந்த சங்கத்தில் இணைந்து கொண்ட தொழிலாளர்கள் தம்மை கம்யூனிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். அடுத்த வருடமே கம்யூனிஸ்டுகளின் இரண்டாவது மாநாடு லண்டனில் கூடியது. கார்ல் மார்க்_ம், பிரெட்ரிக் ஏங்கல்ஸ_ம் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டிகளாக மாறினர்.

பிரட்ரிக் ஹெகல் என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, டம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்ஸ் தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

 • ஹெகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
 • அடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல்பொருளாதாரம்.
 • பிரான்ஸ், சோசலிச மற்றும் சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜோன் ஜெக்ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின்சிந்தனைகள்.
 • முந்திய ஜெர்மனிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக்ஃபியுவெர்பக்.
 • பிரெட்ரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.

ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்துவந்த அடிமை முறையை தீவிரமாக எதிர்த்து வந்த ஹெகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டதாகவே வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் முன்வைக்கின்றார். மனித வரலாறு துண்டுதுண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என்பது ஹெகலின் கருத்து. இந்த உண்மைநிலையை நோக்கிச் செல்கின்ற வழிமுறையானது பல படிமுறைகளைக் கொண்டது எனவும், சில சந்தர்ப்பங்களில் இருக்கின்ற நிலைக்கு எதிராக தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்று அவர் விளக்கியிருந்தார்.

இதன் அடிப்படையில், மனித இயல்பு பற்றிய தனது நோக்கிலேயே மெய்யியலை வரைவிலக்கணப்படுத்துகின்றார். இயற்கையை மாற்றுவதே மனிதனுடைய இயல்பு என்று அவர் கருதினார். அந்த செயல்பாட்டை உழைப்பு என்றும் அதற்கான திறனை உழைப்புச் சக்திஎன்றும் அவர் விளக்குகின்றார். இந்த செயல்பாடு உடல் மற்றும் உளஞ் சார்ந்தது என்பது அவரது உறுதியான எண்ணம்.

பல துறைகளிலும், வேறுபட்ட ஆய்வுகளையும், ஆக்கங்களையும் எழுதி வெளியிட்டுள்ள இவரது எழுத்துக்கள், அடிப்படையில் வர்க்க முரண்பாடுகளின் வரலாற்றை வெளிக்காட்டுவதாகவே அமைந்திருந்தன.

இந்த நிலையில் 1849ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸை பிரான்ஸின் பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு நாடு கடத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவுக்கு பணி மறுத்த மார்க்ஸ் மனைவி, பிள்ளைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது இறுதிக் காலம் வரை அவர் லண்டனிலேயே வசித்தார். லண்டனில் அவர் வசித்த காலப்பகுதியில் வறுமையால் மிகவும் அவதிப்பட்டார். இந்த சந்தர்ப்பங்களில் மார்க்ஸ_க்கும், அவரது குடும்பத்திற்கும் உதவியாக இருந்து, பண உதவி வழங்கி வந்தவர் ஏங்கல்ஸ். நியூயோர்க் டெய்லி ரிபியூன் என்ற பத்திரிகைக்கு மார்க்ஸ்உலகத்தின் பொருளாதாரம்பற்றி தொடர்ந்து பல ஆக்கங்களை எழுதி வந்தார். அதன் மூலம் அவருக்கு சிறியளவு வருமானம் கிடைத்தது. முற்போக்கு பத்திரிகையான இந்த பத்திரிகையில் எழுதப்படும் ஒரு ஆக்கத்திற்கு ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது. 1862ஆம் ஆண்டு வரை அவர் இந்த பத்திரிகைக்காக ஆக்கங்களை எழுதி வந்தார். 1867ஆம் ஆண்டு செப்ரம்பர் 14ஆம் திகதி மார்க்ஸின் மூலதனம் முதலாம் பாகம் வெளிவந்தது. உலக பொருளாதாரத்தின் அடிப்படையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களும் வெளிவந்தன.

மூலதனம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையை சுருக்கமாக விளக்க முற்படுவோமாயின், உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும்நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்தை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர். இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலுடைய விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இந்த உண்மையைத்தான் மார்க்ஸ் தனதுமூலதனம்எனும் நூலில் உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

மார்க்ஸ_க்கும், ஜென்னிக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் மூன்று பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.

1881ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னி மரணமடைந்தார். இதன்பின்னர் 15மாதங்கள், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி ஆகிய நோய்களால் அவதிப்பட்டு வந்த கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி உயிரிழந்தார்.

மார்க்ஸின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பேசிய, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மார்ச் 14 ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, வாழ்ந்துகொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பிவந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்." என்றார்.

லண்டனிலுள்ள ஹைகேட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸின் கல்லறையில் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் (Workers of All Land Unite)”, நம்முடைய முந்தைய தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால், தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவது தான்.” என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

இந்த கல்லறை 1954ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சியினால் கார்ல் மார்க்ஸின் மார்பளவு சிலையுடன் திருத்தியமைக்கப்பட்டது.

பாட்டாளிகள் - இழந்து விடுவதற்குத் தங்களைப் பிணைத்திருக்கும் தவறுகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வென்றடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் - கார்ல் மார்க்ஸ்

Comments

 1. பதிவுலகில் மார்க்ஸ் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 2. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.
  அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
  தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
  வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
  நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.
  உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.
  அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்த விசுவானந்ததேவன், 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

  - நல்லையா தயாபரன்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது
அடிமையில்லை. அறிக! என்றார்
இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுகமாதே! -பாரதி (புதிய ரஷ்யா)-
முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.

ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை…