
யார் கொன்றதோ?
யார் கொலை செய்யப்பட்டதோ?
தினம் வேட்டை
பழி வாங்கும் வெறி
இனி யுத்தம்
பாரிய தாக்குதல்
எல்லாம் முடிவுக்கு வரும்.......
இளமை தொலைந்த
அங்கவீன சமூகம்
குருதி வடிந்த
கருகிய கந்தக வயல்வெளிகள்
நான்! நீ!
என்ற பாகுபாடு,
ஆயுதங்கள்
அணிவகுத்து நிற்கும் ,
உணர்வற்ற உடல்கள்
மண்டைஒடுகள்
ஒதுங்கி மரியாதை செய்யும்,
ஒற்றைக்கால்
ஒற்றைக்கையுடன்
புதியதாய் பிறந்த
இரண்டு குழந்தைகள்
வாழும்
குற்றுயிராய்....
(இந்த கவிதை புதிதாக எழுதப்பட்ட ஒன்று அல்ல.மூன்று வருடங்களுக்கு முன்னர் "பயில்நிலம்" சஞ்சிகைக்காக எழுதிய கவிதை. ஏதோ ஒரு வகையில் நடைமுறையின் சந்தர்ப்பங்களுடன் இந்த கவிதை பொருந்தியிருக்கின்றது. அதனால் இங்கு இந்த கவிதையை மீள்பதிப்பு செய்கின்றேன்.கவிதை வாசித்து உங்களுக்கும் பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்கு போடலாம்)
வலி மிகுந்த ஆழமான வரிகள்..
ReplyDelete//கௌரி பிரியா//
ReplyDeleteஉங்கள் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...