Skip to main content

உன்னை மாத்திரம்

வார்த்தைகளை கோர்த்துக் கொடுத்துவிட்டு
ஒரு மூலையில் போய் அமர்ந்து விடுகின்றது
இந்த பாழாய்ப் போன புத்தி,
சில அழகிய தவறுகளையும்………
இன்பமான வேதனைகளையும்……..
புரிந்து கொண்டே…
என்னை தடுத்து நிறுத்தாமால்
வழி நடத்திக் கொண்டிருக்கின்றது
என் புத்தி……
அலுவலகப் பணியில்
அப்படியே மூழ்கி கிடைக்கும்
ஒரு விநாடி ஒய்வில்
சோம்பல் முறிக்க,
தொற்றிப் பிடித்து
ஏறி உட்கார்ந்து கொள்கிறாய்
நினைவலைகளில்….
எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது…
இந்த நினைவுக் கொள்ளை…..

எதையும் யோசிக்காது
கடந்து போய்க் கொண்டிருக்கும் காலத்தினை நிறுத்தி
கழுத்தில் பிடித்து,
அப்படியே இடமிருந்து வலமாக சுற்றி
ஒரு சில ஆண்டுகள் பின்னே போய் பார்க்க வேண்டும்….
மீண்டும் ஒருமுறை
உன்மீதான காதலை நான் வெளிப்படுத்திய அந்தப் பொழுதை….

கைகள் வியர்க்க,
இதயத்துடிப்பு அதிகரிக்க,
சொற்கள் தடுமாற,
அந்த ஒரு வார்த்தையை சொல்ல
குறைந்தது முன்னூறு விநாடிகள்.
எப்படியும் சொல்லிவிடுவெதன்ற நினைவில் சொல்லிவிட்டு….
பூமி பார்த்து கொஞ்ச நேரம் நாணம்…..
அட, அந்த கணமே உன் முகம் பார்த்து
உன் பதிலை புரிந்து கொண்டிருந்தால்……..இல்லை…
இன்னும் வேகமாக இடமிருந்து வலம் சுற்றி…..
பின்னே சென்று…..
உன்னைப் பார்த்த அந்த நாள்……
கடும் வெயில் கனலும் அந்திப் பொழுதில்….
சில்லென்ற காற்றின் சிலிர்ப்பில்
இதயம் இருந்த இடத்தை நினைவுப்படுத்திய
உன்னைப் பார்த்து தொலைந்து போன கணங்கள்…..

எப்படி என்னால் மாத்திரம் முடிகின்றது
உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்க…..

Comments

  1. //எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது…
    இந்த நினைவுக் கொள்ளை…..//

    அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  2. கடந்த கால நினைவுகள் அழகான கவி வரிகளில் செதுக்கப் பட்டிருக்கிறது.

    வாழ்த்துக்கள் அண்ணா.....

    ReplyDelete
  3. வரிக்கு வரி உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள். எனது கிறுக்கலையும் படித்து வருவதற்கு நன்றி.

    ReplyDelete
  4. nee nenaikirai,unnal mattum thaan mudikirathu enru !! unmai thaan! unnai pol oruththan intha ulagaththil mendum piranthu thaan vara vendum.... i'm sorry,i don't know how to use tamil font here...

    ReplyDelete
  5. aluvalakaha panikaluku idaiyilum aval nenaivukal unnai thotti pidiththa pothum avalukaha oru piranththa naal valththu attai varaiya unnal mudiya villaiye?

    ReplyDelete
  6. காதலை இவ்வளவு அழகாக சொல்ல, காதலில் திளைத்தவனால் மட்டும் தான் முடியும்! காதலை இதைவிட எப்படி சொல்ல? அருமை!!!!

    ReplyDelete
  7. உங்களின் மற்ற படைப்புகளையும் படிக்க ஆசை ஊட்டுகிறது இக் கவி! அனைத்தயும் படித்துவிட்டு வருகிறேன். இன்று இரவுக்குள்!!!

    ReplyDelete
  8. நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….