Skip to main content

ஜனநாயகம் வளரட்டும்

பார் ஆளும் மன்ற உறுப்பினராய் தான் பிறக்க பாக்கியங்கள் பல செய்த பின் கண்டிருந்த சலுகைகள் எல்லாம் மறந்திடத்தான் ஆகிடுமோ!

எதிர்க்கட்சி, ஏனை எக்கட்சி என்றாலும் ஊர் கூடி வாக்கிட்டு வாழ்த்துச் சொல்லி மாலையிட்டு ஏற்றிவிட்ட புகழ் வாழ்க்கைதான் குறைந்திடுமோ!பார் ஆளும் மன்றம் தான் என்ன? பகைவன் வீடா? இல்லை பாம்பு வாழும் காடா? பல மக்கள் வாக்குப் போட்டு வழியனுப்பி வைத்த தீரர்கள் கூடும் திடல் அல்லவா!

எத்தனை தான் பேசினாலும், ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமெடுத்து கார் செல்ல
குளிர்காய்ந்திருந்த வேட்பாளர் எந்நாளும் அப்படியே திளைத்திருப்பாரோ!

ஒருநாள் தேர்தல் வரும், தீரர்கள் களம் புகுவர், கையெடுத்து கும்பிடுவார், கால் தொட்டு வணங்குவர், ‘ஐயா’, ‘அம்மணி’ மக்கள் தெய்வங்களாகுவர்!

அந்த ஒரு பொழுது போதாதா! பின் பல காலம் அடுத்த தேர்தல் வரும் வரை அவர்கள் தெய்வங்களாய், நீவீர் இல்லாத ஒன்றாய், காணாமல் போவீர்!

ஒன்றாகி, பலவாகி, பல்லுருவமாகி, அமைச்சாகி, அரசாகி, அகிலம் போற்றும் அநாதியாகி, பின் மீண்டும் தேர்தல் நாளில் மக்களாகி!

நம் தலைவன், நம் தலைவி- யார் மேல் பழியுரைப்போம்? சொன்னவன் யார், நாவை தறி! காட்டியவன் யார் கையை வெட்டு!

ஒரு
புள்ளடியில் அரசு சமைக்கும் அதிகாரம் நம்மிடம். யார் என்ன செய்வார்? அடி, உதை, கொல், புதை, யார் கேட்பார்? நாமல்லோ மன்னர்காள்!

நான்கு வருடம், மூடித் திறந்தால் முடிந்து விடும். வாக்குகள் மாறிவிழும், தோற்றவன் வெல்வான், வென்றவன் தோற்பன், நம் கையில் நாளை!நம்மிடம் செல்லாது நயவஞ்சகம், நான்கு வருடம் காத்திருந்து குப்புற விழச் செய்வோம். இன்றா வென்றாய், இனி நான்கு வருடம் மட்டுந்தான் உன்கையில்!

குறைந்த சம்பளமா, உண்ண உணவில்லையா? மகனைக் காணவில்லையா? மகள் எங்கே போனாள்? பொறுத்திரு நான்கு வருடம், காலம் வரும் மாற்றிவிடலாம்!

காலம் வரும், புரட்சி வரும் என்றெல்லாம் எழுதினாயா? எழுதியதை கிழித்துப் போடு, யாரிடமும் சொல்லாதே, அன்றேல் பின் கைது வரும்!

இதை பார்க்காதே! வாசிக்காதே! வாய் திறந்து பேசாதே! யாரிடமும் சொல்லாதே! ஜனநாயகம் வளரட்டும்!

Comments

  1. இன்றைய ஞாயிறு தினக்குரலில் இணையத்தில் எம்மவர்கள் - இந்த வார நட்சத்திரமாகத் தெரிவானதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்திமுறையின்வளர்ச்சிக்கட்டங்களில்தான்வர்க்கவேறுபாடுகள்தோன்றுகின்றன. வர்க்கப்போராட்டம்கண்டிப்பாகபாட்டாளிசர்வாதிகாரத்திற்குவழிவகுக்கும். அந்தச்சர்வாதிகாரமானதுவர்க்கப்பிளவுகளைஒழித்துவர்க்கமற்ற

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…

நிபிரு - தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் – 2

நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணம் பலவழிகளிலும் அச்சத்தையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாக மாறியுள்ளது. சூரிய கிரகணம் தொடர்பில் நேற்று நாடு எழுதியிருந்த பதிவுக்காக பல இணையத்தளங்களிலும் விடயங்களை சேகரித்துக் கொண்டிருந்த போது "நிபிரு" என்ற விடயம் மிகுந்த அவதானத்தை செலுத்தக் கூடிய விடயமாகவிருந்தது. நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணத்திற்கும், நிபிருவுக்கும் இடையிலான தொடர்புகள் அரிதானதாக காணப்படுகின்ற போதிலும், அடுத்து வரும் வருடங்களில் பேசப்படப் போகின்ற ஓரு விடயப் பொருளாக நிபிரு விளங்குகின்றது.
http://6thscientific.blogspot.com/என்ற வலைப்பதிவில் நிபிரு தொடர்பான தகவல்கள் சில சிக்கின. அந்த தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் கீழே தருகின்றேன். குறித்த வலைப்பதிவரின் எண்ணம்,அனைவர் மத்தியிலும் இந்த விடயத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இருப்பதால் அவரது அனுமதியின்றியே எனது வலைத்தளத்தில் அவரது பதிவை மீள்பதிவு செய்கின்றேன்.
அந்தகாலத்திய ஈராக் பகுதிகளில் கோலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம்.இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படி…