Skip to main content

நினைவுகள் இயக்கும் காதல்


தனிமை துரத்தும் நொடிகளில்
எழுதத் தொடங்கி
எழுதி முடிக்காத ஒரு கடிதம்
உன் பிடிவாத மறுப்பால்
வாசிக்கப்படாமல்
இதய அறையின் இருட்டறையில்…

நினைவுகளாய் நெருங்கி
வெறுப்புக்களாய் விலகிச் செல்லும் புள்ளி
விஸ்வரூபமெடுக்கின்றது
ஆழ்மனதில் அலையடிக்கும் கணப்பொழுதில்….

இரண்டாம் தாயாய்
என் வாழ்வில் உனை இணைக்கும்
காதல் போரில்
ஆயுதங்களின் கடிவாளங்களாய் இறுகிக் கிடக்கும்
உன் மனதை
தாக்க முடியாமல் அந்தரத்தில் தடுமாறுகின்றது
என் நினைவு…..

சூறாவளியாய் சுழன்றடித்து
பிரக்ஞையற்றதாக்கிய
உன் கண் இமைக்கும் நொடிக்குள்
பார்வை சொன்ன செய்தி
பிரதியெடுத்து பதிவானது என் எண்ணக் கோப்பில்…..

உன்
இமை மடிந்த கணங்களும்,
இதழ் விரிந்த நொடிகளும்
இறக்க விடாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றது
உன் மீதான
என் காதலை……


பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. தினந்தோறும் நாட்குறிப்பேட்டில் எழுதும் பழக்கம். ஆகஸ்ட் மாத பொழுதொன்றில் எழுதியிருக்கின்றேன். வாசித்துப் பார்த்தேன். பிடித்தது. பகிர்ந்து கொள்கின்றேன்.

Comments

 1. காலமெலாம் காதல் வாழ்க . நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைப்பதை விரும்பு.
  பல காதல் சுபமாய் முடிவதில்லை.அதற்காக் வாழ்வை வீணாக்கி கொள்ளாதீர்கள்.
  வாழ்க வளமுடன். அக்கா

  ReplyDelete
 2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிலாமதி அக்கா!

  ReplyDelete
 3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 5. நான் இறந்த பின் கல்லறையில் எழுதி வையுங்கள்….
  காதலின் நினைவுகளில் காலங் கழித்தவன் இவன் என்று!//

  இந்த வரிகளைத் தவிர்த்து...

  கவிதை அபாரம்...(எனது ரசனையில்..)

  ReplyDelete
 6. நன்றி ஸ்ரீராம்,
  எனக்கும் அந்த வரியை மீண்டும் வாசிக்கும் போது திருப்தியாயில்லை. இருந்தபோதிலும், அன்றிருந்த மனநிலையை அப்படியே வெளிப்படுத்துவதற்காய் அந்த வரியை சேர்த்துக் கொண்டேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 7. அருமையான கவிதை உணர்ச்சிகளை
  அப்பட்டமாக வெளிப்படுத்தி நிட்கிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றையதினத்துடன் (25-08-2009) வானியலின்தந்தைகலீலியோகலிலிதொலைநோக்கிஎன்றஅரியபொருளைகண்டுபிடித்து 400 வருடங்கள்பூர்த்தியாகின்றன. அதன்நினைவாக, கலீலியோகலிலியின்தொலைநோக்கிகண்டுபிடிப்புமற்றும்அதனைத்தொடர்ந்தவானியல்சாதனைகள்தொடர்பில்ஒருகட்டுரைஎழுதலாம்என்றுதோன்றியது. 1609ஆம்ஆண்டில்கலீலியோஎன்றவானியலாளர்தொலைநோக்கிஒன்றைஉருவாக்கிப்பயன்படுத்தியதன் 400ஆவதுஆண்டுகொண்டாட்டமாகஇந்தஆண்டு (2009) சர்வதேசவானியல்ஆண்டாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளநிலையில், இந்தகட்டுரைபயனுள்ளதாகஅமையும்எனஎதிர்பார்க்கின்றேன்.
1608 ஆம்ஆண்டிலேயேதொலைநோக்கிகள்உருவாக்கப்பட்டபோதிலும்கலீலியோதான்நல்லதிறனுடையதொலைநோக்கிகளைஉருவாக்கினார். கலீலியோதொலைநோக்கிகளைஉருவாக்கியதோடுநிற்கவில்லை. அதைக்கொண்டுவானைஆராயமுற்பட்டார். வானில்நம்கண்ணால்பார்க்கக்கூடியபூமியின்துணைக்கோளானசந்திரனில்தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில்பறக்கும்எரிகற்கள்எனஅனைத்தையும்கவனிக்கத்தொடங்கினார். கவனித்ததோடுநில்லாதுஅவைசெல்லும்பாதைகளைகுறிக்கத்தொடங்கினார். கலீலியோவுக்குமுன்னதாகஐரோப்பாவில்அதிகம்வானியல்ஆராய்ச்சிகள்நடந்ததில்லை. எனவே, கலீலியோவைவானியலின்தந்தைஎன்றுசொல்வதில்தவறுஒன்றுமில்…

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.

பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வ…

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்திமுறையின்வளர்ச்சிக்கட்டங்களில்தான்வர்க்கவேறுபாடுகள்தோன்றுகின்றன. வர்க்கப்போராட்டம்கண்டிப்பாகபாட்டாளிசர்வாதிகாரத்திற்குவழிவகுக்கும். அந்தச்சர்வாதிகாரமானதுவர்க்கப்பிளவுகளைஒழித்துவர்க்கமற்ற