
தனிமை துரத்தும் நொடிகளில்
எழுதத் தொடங்கி
எழுதி முடிக்காத ஒரு கடிதம்
உன் பிடிவாத மறுப்பால்
வாசிக்கப்படாமல்
இதய அறையின் இருட்டறையில்…
நினைவுகளாய் நெருங்கி
வெறுப்புக்களாய் விலகிச் செல்லும் புள்ளி
விஸ்வரூபமெடுக்கின்றது
ஆழ்மனதில் அலையடிக்கும் கணப்பொழுதில்….
இரண்டாம் தாயாய்
என் வாழ்வில் உனை இணைக்கும்
காதல் போரில்
ஆயுதங்களின் கடிவாளங்களாய் இறுகிக் கிடக்கும்
உன் மனதை
தாக்க முடியாமல் அந்தரத்தில் தடுமாறுகின்றது
என் நினைவு…..
சூறாவளியாய் சுழன்றடித்து
பிரக்ஞையற்றதாக்கிய
உன் கண் இமைக்கும் நொடிக்குள்
பார்வை சொன்ன செய்தி
பிரதியெடுத்து பதிவானது என் எண்ணக் கோப்பில்…..
உன்
இமை மடிந்த கணங்களும்,
இதழ் விரிந்த நொடிகளும்
இறக்க விடாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றது
உன் மீதான
என் காதலை……
பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. தினந்தோறும் நாட்குறிப்பேட்டில் எழுதும் பழக்கம். ஆகஸ்ட் மாத பொழுதொன்றில் எழுதியிருக்கின்றேன். வாசித்துப் பார்த்தேன். பிடித்தது. பகிர்ந்து கொள்கின்றேன்.
காலமெலாம் காதல் வாழ்க . நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைப்பதை விரும்பு.
ReplyDeleteபல காதல் சுபமாய் முடிவதில்லை.அதற்காக் வாழ்வை வீணாக்கி கொள்ளாதீர்கள்.
வாழ்க வளமுடன். அக்கா
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிலாமதி அக்கா!
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நான் இறந்த பின் கல்லறையில் எழுதி வையுங்கள்….
ReplyDeleteகாதலின் நினைவுகளில் காலங் கழித்தவன் இவன் என்று!//
இந்த வரிகளைத் தவிர்த்து...
கவிதை அபாரம்...(எனது ரசனையில்..)
நன்றி ஸ்ரீராம்,
ReplyDeleteஎனக்கும் அந்த வரியை மீண்டும் வாசிக்கும் போது திருப்தியாயில்லை. இருந்தபோதிலும், அன்றிருந்த மனநிலையை அப்படியே வெளிப்படுத்துவதற்காய் அந்த வரியை சேர்த்துக் கொண்டேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
அருமையான கவிதை உணர்ச்சிகளை
ReplyDeleteஅப்பட்டமாக வெளிப்படுத்தி நிட்கிறது.