கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிப்பவர்கள்; நேற்றிரவு நிச்சயமாக, நிம்மதியாக உறங்கியிருக்கமாட்டார்கள். தொடர்ச்சியான இடியும், மின்னலும் எவரையும் உறங்கவிட்டிருக்காது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களாக இலங்கையில் மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதைப் போன்றே புவியியல் சார் பிரச்சினைகளும் அவதானிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உணரப்பட்ட புவிநடுக்கங்கள். பருவம் மாறிய காலநிலை. ஏனைய பருவங்களைப் போலல்லாது கோடைக்காலத்தில் அதிகமாக உணரப்பட்ட உஷ்ண நிலை. கடந்த வருடத்தில் புசல்லாவை பகுதியில் பெய்த அமிலமழை. என காலநிலை அச்சுறுத்தல் இலங்கையிலும் அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த சில தினங்களாக புதிதாக பதிவு எதுவும் எழுதாத நிலையிலும், இன்று புவி தினம் என்பதால் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நேற்று உறங்கச் சென்றேன். ஆக புவி தினமும் கொழும்பை அதிர வைத்த நேற்றைய காலநிலையும் ஏதோ வகையில் நமக்கான செய்தியை சொல்லிச் செல்வதாக உணர்ந்தேன். "தண்ணீருக்கு காத்திருப்பவனுக்கு தேநீர் கிடைத்தால் சும்மாவா...
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...