Skip to main content

நானில்லாத நீ...


எத்தனை முறை
என் நினைவேட்டின்
கடைசி வரியில்
உன்னை மறைத்து வைத்தாலும்,
உன் நிஜங்கள் செவி நனைக்க
தென்றல் பட்ட மலராய் ..
கலைந்து போகின்றேன்.


உன் சிணுங்கல்கள் என்னை சிதைத்ததுப் போலவே
உன் மௌனமும்,
என்னை முகாரி இராகங்களுக்கு
அடிமையாக்கியது.


என்
நிஜங்களையும் கனவுகளையும்,
உன்
நினைவுகளுக்கே அளித்தேன்..
ஆனால்,
நீ எனக்காய் தந்தது
உன் மறுப்பை மட்டும் தான்,


என்றாவது ஒரு நாள்...
என் இதயத்தின்
வெகு ஆழத்தில்
நீ அமிழ்ந்து போவாய்..
அன்று,
நான் இல்லாத உனக்காய்,
அனுதாபப்படும்
இவ்வுலகம்..

Comments

  1. //எத்தனை முறை
    என் நினைவேட்டின்
    கடைசி வரியில்
    உன்னை மறைத்து வைத்தாலும்,
    உன் நிஜங்கள் செவி நனைக்க
    தென்றல் பட்ட மலராய் ..
    கலைந்து போகின்றேன்//

    நல்ல கவிதை கோபிநாத். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  3. உணர்வுகளை பிரதிபளிக்கத்தக்க அருமையான வரிகள்

    வாழ்த்துக்கள் பதிவுலகில் நுழைந்தமைக்கு !

    Priyamudan
    டயானா

    ReplyDelete
  4. உணர்வுகளை பிரதிபலிக்கத்தக்க அருமையான வரிகள்

    வாழ்த்துக்கள் பதிவுலகில் நுழைந்தமைக்கு !

    ப்ரியமுடன்
    டயானா

    ReplyDelete
  5. மிக்க நன்றி பிரேம்குமார்...
    மிக்க நன்றி டயானா...

    ReplyDelete
  6. இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுங்கள்
    உங்கள் கவியாற்றல் மேலும் வலுப்பட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஆய்வு செய்பவர்கள்
    நிறுத்திக் கொள்ளுங்கள்
    காரணம் கண்டுபிடிக்கப்
    பட்டுவிட்டது.
    பூமித்தாயின் புழுக்கத்திற்கு

    காதல் ஏற்றுக் கொள்ளப்படாத
    கவிஞர்கள் வடிக்கிறார்கள்
    கவிதை(கண்ணீர்)
    எழுதும் போது நெஞ்சம் எறிகிறது
    கைகள் கனல்கின்றன
    அக்கினியாய்!

    காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்
    ஏற்றுக் கொள்பவளைக் காதலி
    எழுதுபவர்கள் கவிஞர்கள் தான்
    தனக்கென வரும்போது
    தலைகவிழ்வது ஏன்?

    பேனா கையில் ஈரம் இல்லை என்றால்
    இவர்களில் எல்லா கவிதைகளும்
    எரிந்து போயிருக்கும்.. எப்போதோ...

    நெஞ்சத் தனலின் நெருப்பு நாவால்
    எழுதுவதை நிறுத்திக் கொண்டு
    மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள்
    கவிதைகளை மானுடம் சிறப்புறட்டும்
    "குளோபல் வோமிங்"
    கொஞ்சமாவது தணியும்..

    ReplyDelete
  8. என்
    நிஜங்களையும் கனவுகளையும்,
    உன்
    நினைவுகளுக்கே அளித்தேன்..
    ஆனால்,
    நீ எனக்காய் தந்தது
    உன் மறுப்பை மட்டும் தான்...


    நீயில்லா நான்....

    ReplyDelete
  9. உன்னை விரும்பிய நான் சுயநல வாதியா - அல்ல
    என்னை வெறுத்த நீ சுயநல வாதியா - அல்ல
    என் காதலே வெறும் சுயநலம் தானா???????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல...

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...