என்னுடைய எழுத்துக்களுக்கு முதலாவது ரசிகராகவும், விமர்சகராகவும், அவற்றிலும் பார்க்க நான் எழுதுவதற்கு பிரதான காரணங்களாக இருந்தவர்களில் ஒருவரான மாவை வரோதயனின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். அவருக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது மறைவுக்காக விடுத்துள்ள ஊடங்களுக்கான செய்திக் குறிப்பை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். ஊடக செய்திக் குறிப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றி வந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும், விமர்சகரும், நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி.சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பெரவையின் சஞ்சிகை...
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...