அதோ அங்கே ஒரு உருவம்….
வெள்ளையுடை,
சிறகுகள்
கையில் மந்திரக்கோல்….
அந்தரத்தில் பறந்தபடி….
ஒரு சிறுமி…..
பள்ளியில் படித்த தேவதையைப் போல்….
நெருங்கிச் செல்கிறேன்.
மிக நெருங்கி….
வெள்ளையுடை இல்லை…
கையில் கோல் இல்லை…..
சிறகுகளை காணவில்லை….
கந்தல் உடை…
அகோரமாக….
கையில் இரத்தம் வடியும் குழந்தை
சிவந்த கண்கள்….
சிறகுகளுக்கு இருந்த இடத்தில்…. சிலுவையொன்று…
மெல்ல மெல்ல அசைகிறது
என்னை நோக்கி
அந்த சிறுமியின் உருவம்…..
ஒடத் தொடங்குகிறேன்…
ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்….
மிகநெருக்கமாய்
அந்த உருவம்….
மிக மிக நெருக்கமாய்…..
மண்டையோடுகளையும்….
அழுகுரல்களையும்…ஒநாய்களின் ஒலங்களையும் தாண்டி…
என் ஓட்டம் நிற்கவில்லை…..
ஆனால் மிக நெருக்கமாய் அந்த உருவம்…..
இப்போது இன்னும் விகாரமாய்…..
கையில் இருந்த குழந்தையை காணவில்லை…..
சிலுவையும் மறைந்துவிட்டது.
சிறகுகள்…மந்திரக்கோல்…வெள்ளையுடை….
என்னைத் தாண்டி அந்த உருவம் பறந்து செல்கின்றது..
களைத்து அமர்கிறேன்.
தோல்களில் சுமை…கையில் இரத்த வாடை…
என் கால்களை இறுக்கிப் பிடித்தவாறு அந்த குழந்தை…..
என்னைப் பார்த்து சிரிக்கின்றது…
எழ முயற்சிக்கிறேன்…
கால்கள் சுயநினைவற்று…..
கண்கள் இருள்கின்றன…..
தூரத்தில் ஒரு பாட்டி, ஒரு காகம், ஒரு நரி……
எங்கோ, இவர்களைப் பார்த்த ஞாபகம்…..
பக்கத்திலே ஒரு மான் பாய்ந்தோடுகின்றது…..
வில்லோடு ஒரு உருவம்……
தூக்குக் கயிறு, யூதாஸ்….
குரங்குகள், தொப்பி வியாபாரி, முட்டை மனிதன்…
எல்லாமே என்னைச் சுற்றி…..
நெருங்கி மிக நெருங்கி…..
நான் பறக்கிறேன்.
எனக்கும் சிறகுகள்
கையில் குழந்தை இல்லை…..
வெள்ளையுடை…..
கையில் கோல்…..
அம்மம்மா கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்…
எதுவுமே கேட்கவில்லை…
எந்த மொழியும் எனக்கு புரியவில்லை..
அம்மாவின் கர்ப்பையில்…..
நீர்க்குடத்தில்.
அமைதியாய்…..
புரியுது. ஆனா புரியல
ReplyDeleteபுரியுது. ஆனா புரியல
ReplyDeleteகோபிநாத்........kalakiringa.......
ReplyDeleteதிரில் படம் பார்த்த பிரமிப்பு உங்கள் நடையில்! ட்விஸ்ட் சூப்பர்! அழகு கவிதை!!
ReplyDeleteநன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்
ReplyDelete