Skip to main content

2010 பாராளுமன்றத் தேர்தல் - ஜனநாயகக் கனவு....


இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில்> நான் ஏற்கனவே பதிவிட்ட பாராளுமன்றத் தேர்தல் திறந்து விட்டுள்ள சந்தர்ப்பங்கள் பதிவினை மீட்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இது.


ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்று கூறிக்கொள்ளும் நாடுகளின்> ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் அல்லது நான்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஜனநாயகத்தை நினைவுபடுத்தும் மற்றும் மக்கள்- நாயகர்களாக இருக்கும் ஒரு சில நாட்கள்தான் இந்த தேர்தல் காலம். ஆனாலும்> காலத்துக்கு காலம் அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்கும்> எதிர்காலத்தில் தமது அதிகாரத்தின் உத்தரவாதத்திற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட தேர்தல் முறைமைகள் மக்களிற்கு ஜனநாயகத்தை வழங்குவதற்கு அல்லது குறைந்தபட்சம் பாதுகாப்பதற்கு இன்றுவரை பயன்பட்டதேயில்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.


எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயக ஆட்சி முறைமையின் அடையாளம் என்று கூறப்படும் பாராளுமன்றம் என்பது> முதலாளிகளும்> அதிகாரம் மிக்கவர்களும் பிரதிநிதித்துவம் செய்யும் ஆடம்பர மாளிகை மாத்திரம். எனினும்> இருக்கின்ற ஒரு முறைமையில் இருந்து> புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அந்த முறைமையில் அதிகாரம் பெறுதல் என்பது தேவையாக இருக்கின்றது. கடந்த பதிவில் கூறியதைப் போன்று கடந்த கால அரசியல் அனுபவங்களை பாடங்களாக எடுத்துக் கொண்டு மக்களி; நலனை மாத்திரம் அடிப்படையாக கொண்டு நல்லாட்சி முறைமை ஒன்று அமைக்கப்படுவதற்கான தேவை காணப்படுகின்றது.


ஆக> மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல் நடவடிக்கையாக ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. எனினும்> அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வகையான மாற்றங்களை கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எவ்வித தெளிவான கருத்துக்களும் ஆளுந்தரப்பினால் முன்வைக்கப்படவில்லை. இதேவேளை> ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து> நல்லாட்சி முறைமை தொடர்பில் கேள்வி எழுப்பி வரும் ஐக்கிய தேசியக் கட்சி> சில சிறுபான்மை கட்சிகளுடன் (ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்> ஜனநாயக மக்கள் முன்னணி) ஒன்றிணைந்து மனித உரிமைகளை பாதுகாத்தல்> ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தல்> பொருளாதாரத்தை கட்டியெழுப்பல்> வாழ்க்கைச் செலவை குறைத்தல் போன்ற பரப்புக்களை பிரதானப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியைச் சந்தித்த இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவோடு (அரசாங்கத்திற்கு எதிரான சதி மற்றும் இராணுவத்தில் இருந்த போது மோசடி என்ற குற்றச்சாட்டுக்களுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளவர்) இணைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி வெற்றிக் கிண்ண சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது. அது மாத்திரமின்றி வேறு பல சுயேட்சைக் குழுக்களும்> அரசியல் கட்சிகளும் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளன.


இலங்கை முழுவதிலும் 225 ஆசனங்களுக்காக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. 22 தேர்தல் மாவட்டங்களில் 225 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக> 7620பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டின் அளவு சுமார் நான்கு அடி நீளமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வாக்குச் சீட்டில் இருந்து தமது விருப்பத்துக்குரியவரை தெரிவு செய்து வாக்களித்துவிட்டு> அந்த வாக்குச் சீட்டை மடித்து வாக்குப் பெட்டியில் போடுவதற்குள் போதும்> போதும் என்றாகிவிடும். இவ்வளவு பெரிய வாக்குச் சீட்டுக்களை வாக்குப் பெட்டிகளுக்குள் போடுவதென்றால்> பெரிய பெரிய வாக்குப் பெட்டிகளும் தேவையாக இருக்கும்.


தேர்தல் மாவட்டங்களும்> தெரிவு செய்யப்படவுள்ள வேட்பாளர்களும்

மூலம்: தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம்

இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கு> பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் வாக்குகளை இல்லாது செய்வதற்கு அரசாங்கமே சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக ஒருபக்கம் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டும் வருகின்றது.


எது எவ்வாறிருப்பினும்> இம்முறை வாக்காளர்களின் பாடுதான் கவலைக்குரியதாக இருக்கப் போகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முச்சக்கர வண்டி சின்னத்திற்கு வாக்களித்து விட்டு யானைச் சின்னத்திற்காக வாக்களித்தாக கூறிச் சென்ற சம்பவம் தொடர்பில் நண்பர் ஒருவர் எனக்கு கூறியிருந்தார். 20-22 வேட்பாளர்கள் இருந்த போதே> இவ்வாறான சிக்கல்கள் இருக்கின்ற போது> இம்முறை வாக்காளர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே இம்முறையும் தேர்தல் விளம்பரங்கள்> சுவரொட்டிகள்> பெரிய பெரிய பதாகைகள் என வீதிகளின் எல்லாப் பக்கங்களிலும் வேட்பாளர்களின் முகங்களே தெரிகின்றன. அண்மையில்> வவுனியா சென்று வந்த போது பிரதான வீதியில் மின்கம்பங்களில் வேட்பாளர்களின் முகங்கள் தொங்கவிடப்பட்டிருந்ததையும் கண்டேன். கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் பிராசரங்களை மேற்கொள்ளும் வேட்பாளர்கள். இருந்தபோதிலும்> இம்முறை தேர்தலில்> தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவினை மீறி சுவரொட்டிகள்(பொதுவாக சுவரொட்டிகளின் கீழே அந்த சுவரொட்டி அச்சிடப்பட்ட அச்சகத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்> ஆனால் கண்டி> வவுனியா> அனுராதபுரம்> திருகோணமலை> என நான் பார்த்த பல இடங்களில் பெரும்பாலான சுவரொட்டிகளில் அந்தப் பகுதி மாத்திரம் வெறுமையாகவே இருந்தது)> பதாகைகள் வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால்……


இறுதியாக வாக்கெண்ணும் பணிகள் தொடர்பிலும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுமதிக்கப் போவதில்லை என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு> எதிர்க்கட்சிகளின் பிரதான பேசுபொருளாக மாறியிருக்கின்றன. உள்ளுரிலேயே தகுதியானவர்கள் இருக்கும் போது> வெளிநாட்டுக்காரர்கள் எதற்கு என அரசாங்கம் கேள்வி எழுப்பி வருகின்றது. எதிர்க்கட்சி என்றால் அரசாங்கம் முன்னெடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பதுதான் என்ற நிலை காணப்படுகின்ற நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றது? அரசாங்கம் எதிர்பார்த்ததைப் போன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுமா? 113 ஆசனங்களை பெற்று எதிர்க்கட்சி வெற்றியடையுமா? அல்லது குறைந்த ஆசனங்களைப் பெறும் ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்குமா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் விரைவில் கிடைக்கும்..


தேர்தல் வெற்றி என்பது வாக்காளர்களின் கைகளில் இல்லை. வாக்கெண்ணுபவர்களின் கைகளில் உள்ளது.
-ஜோசப் ஸ்டாலின்-

Comments

 1. hi,
  மக்கள்- நாயகர்களாக இருக்கும் ஒரு சில நாட்கள்தான் இந்த தேர்தல் காலம்

  கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் பிராசரங்களை மேற்கொள்ளும் வேட்பாளர்கள்.

  நன்றாக உள்ளது
  நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றையதினத்துடன் (25-08-2009) வானியலின்தந்தைகலீலியோகலிலிதொலைநோக்கிஎன்றஅரியபொருளைகண்டுபிடித்து 400 வருடங்கள்பூர்த்தியாகின்றன. அதன்நினைவாக, கலீலியோகலிலியின்தொலைநோக்கிகண்டுபிடிப்புமற்றும்அதனைத்தொடர்ந்தவானியல்சாதனைகள்தொடர்பில்ஒருகட்டுரைஎழுதலாம்என்றுதோன்றியது. 1609ஆம்ஆண்டில்கலீலியோஎன்றவானியலாளர்தொலைநோக்கிஒன்றைஉருவாக்கிப்பயன்படுத்தியதன் 400ஆவதுஆண்டுகொண்டாட்டமாகஇந்தஆண்டு (2009) சர்வதேசவானியல்ஆண்டாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளநிலையில், இந்தகட்டுரைபயனுள்ளதாகஅமையும்எனஎதிர்பார்க்கின்றேன்.
1608 ஆம்ஆண்டிலேயேதொலைநோக்கிகள்உருவாக்கப்பட்டபோதிலும்கலீலியோதான்நல்லதிறனுடையதொலைநோக்கிகளைஉருவாக்கினார். கலீலியோதொலைநோக்கிகளைஉருவாக்கியதோடுநிற்கவில்லை. அதைக்கொண்டுவானைஆராயமுற்பட்டார். வானில்நம்கண்ணால்பார்க்கக்கூடியபூமியின்துணைக்கோளானசந்திரனில்தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில்பறக்கும்எரிகற்கள்எனஅனைத்தையும்கவனிக்கத்தொடங்கினார். கவனித்ததோடுநில்லாதுஅவைசெல்லும்பாதைகளைகுறிக்கத்தொடங்கினார். கலீலியோவுக்குமுன்னதாகஐரோப்பாவில்அதிகம்வானியல்ஆராய்ச்சிகள்நடந்ததில்லை. எனவே, கலீலியோவைவானியலின்தந்தைஎன்றுசொல்வதில்தவறுஒன்றுமில்…

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.

பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வ…

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்திமுறையின்வளர்ச்சிக்கட்டங்களில்தான்வர்க்கவேறுபாடுகள்தோன்றுகின்றன. வர்க்கப்போராட்டம்கண்டிப்பாகபாட்டாளிசர்வாதிகாரத்திற்குவழிவகுக்கும். அந்தச்சர்வாதிகாரமானதுவர்க்கப்பிளவுகளைஒழித்துவர்க்கமற்ற