நாளாந்தம் எண்ண அலைகளை வேவுபார்த்துவிட்டு
வாழ்க்கையை கொண்டு நடத்தும்
அப்பாவிகளில் நானும் ஒருவன்....
முதல் அற்ற கனவு முதலீட்டில்
எல்லையற்ற ஆசைகளை அலையவிட்டு
ஏமாற்றங்களால் காத்திருக்கும்
அப்பாவிகளில் நானும் ஒருவன்....
சூரியன் உதித்த வழமையான பொழுதொன்றின் நீட்சியில்
ஏங்கிக் கிடந்த
இளமையை எதிர்ப்பாலின் பார்வை ஈர்ப்பில் தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கும்
அப்பாவிகளில் நானும் ஒருவன்.....
மாத இறுதியில் வங்கியில் வந்துவிழும் உழைப்பை
ஒற்றை இலக்கமும் இன்றி மீள்பெற்று
அடுத்த மாத இறுதி வரை வங்கிக் கணக்கின் மீதியை
சரிபார்த்துக் கொண்டிருக்கும்
அப்பாவிகளில் நானும் ஒருவன்.....
சிறுவயது முதல் சேர்த்து வைத்த ஆசைகளை
இழக்காமல், கிடைக்காமல், பிடிவாதங்களின் உரியவனாய்
அப்பாவிகளில் நானும் ஒருவன்....
நாங்களும் நீங்களும் அப்பாவிகள் தான்,
ReplyDeleteஆசை?கனவு ?அப்பாவி? விரைவிலக்கணங்கள் வரையருக்கப்படும்வரை