Skip to main content

காலப் பிரசவம்


விழுதிறக்கி
வேர்கொண்டு
வீறுடை
வீரியமுடன்
வெளித்தள்ளுகிறது காலம்
சதைப்பின்டங்களை
உப்பலாய்
சிதைந்து
உருக்குலைந்து
அருவமாய்
எச்சில் வடியும் நாக்கோடு
மாமிச பிண்டம் தேடி
காலம் கரைகிறது .
இன்னொன்று...
இன்னுமொன்று....
வேறொன்று....
வேறில் ஒன்று .....
இன்னும் தீர்ந்தபாடில்லை...
பசி ...
("பயில்நிலம் " இதழில் இந்த கவிதையை குழலி என்ற பெயரில் எழுதியிருந்தேன், மீண்டும் வாசிப்பதற்கான ஆர்வத்தை இந்த கவிதை எனக்குள் உருவாக்கியதால் பதிவு செய்யும் எண்ணம் எனக்குள் எழுந்தது.)

Comments

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றைய தினத்துடன் (25-08-2009) வானியலின் தந்தை கலீலியோ கலிலி தொலைநோக்கி என்ற அரிய பொருளை கண்டுபிடித்து 400 வருடங்கள் பூர்த்தியாகின்றன . அதன் நினைவாக , கலீலியோ கலிலியின் தொலைநோக்கி கண்டுபிடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த வானியல் சாதனைகள் தொடர்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றியது . 1609 ஆம் ஆண்டில் கலீலியோ என்ற வானியலாளர் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தியதன் 400 ஆவது ஆண்டு கொண்டாட்டமாக இந்த ஆண்டு (2009) சர்வதேச வானியல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இந்த கட்டுரை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் . 1608 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட போதிலும் கலீலியோதான் நல்ல திறனுடைய தொலைநோக்கிகளை உருவாக்கினார் . கலீலியோ தொலைநோக்கிகளை உருவாக்கியதோடு நிற்கவில்லை . அதைக் கொண்டு வானை ஆராய முற்பட்டார் . வானில் நம் கண்ணால் பார்க்கக்கூடிய பூமியின் துணைக்கோளான சந்திரனில் தொடங்கி , பிறகோள்கள் , நட்சத்திரங்கள் , வானில் பறக்கும் எரிகற்கள் என அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினார் . கவனித்ததோடு நில்...

நினைவு உருமாற்றம்....

என் காதலில் உனக்கான இடத்தை வெறுமைப்படுத்த முடியாது ஆழ்ந்து கிடக்கிறது அறிவு.... என்னை மறந்து உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கும் நினைவு உருமாற்றத்தை செய்து விட்டு போய்விடுகிறது காதல்...... உன் மீதான காதலின் அறிகுறியாய் உறக்கம் இன்றி கலைந்த இரவுகளும், நட்சத்திரங்களை தேடிக் கதைத்த தனிமையும் என்னோடு நீங்காமல் இருக்கின்றன. உன்னால் நிராகரிக்கப்பட்ட காதலின் கனவுகள் ஆளில்லா வெளியில் விரவி உறக்கத்தை திருடிக் கொண்டிருக்கின்றன...... நீ வசிக்கும் தெருமுனை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் இதயம் திரும்பிப் பார்க்கின்றது. நீ நடந்து சென்ற வழியில் பூத்துக் கிடக்கும் என் காதலை...