
கால சுழற்சியின்
பெரு நெருப்பில்
தனிமையின் நிழலாய்
வளர்ந்து செல்லும்
நிசப்தத்தில்
ஆளரவமற்ற வீதி
எதையோ
உணர்த்திச் செல்கிறது
பார்வைக்கு எட்டிய தூரம் வரை
உன் நினைவுகளைத் தவிர
எதுவுமேயில்லை ....
வெயிட்காலப்பொழுதுகளில்
நிழலாய் தொடரும்
உன்னை விலக்கி வைத்துவிட்டு
இருளை விழுங்கி
பயங்கர மௌனத்தையும்
அச்சத்தையும்
பிரசவிக்கும்
கொடுரமான தனிமையில்
பயணிக்கிறேன் ....
எஞ்சியிருக்கும் வாழ்வில் ........
//இருளை விழுங்கி
ReplyDeleteபயங்கர மௌனத்தையும்
அச்சத்தையும்
பிரசவிக்கும்
கொடுரமான தனிமையில் //
நல்லாவே எழுதறீங்க தல
நன்றிண்ணா! தலைன்னெல்லாம் சொல்லாதீங்க! அனுபவத்துல வருது!
ReplyDeleteகோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)
ReplyDeletenice one Gopi!
ReplyDelete//கோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)//
ReplyDeleteநல்ல வேளை என் கவிதையைப் பார்த்து பயந்துட்டீங்களோன்னு நினைச்சேன்... நன்றி நண்பா...
//nice one Gopi!//
ReplyDeleteநன்றி ராம்...
Hmmmmmmmmmmmm
ReplyDelete